இவர் இந்தியாவின் மிகச் சிறந்த தொழிலதிபர் மற்றும் விமானி ஆவார்.1980-2000 வரை ரேமண்ட் குழுமத்தின் தலைவராகவும் நிர்வாக இயக்குநராகவும் பணியாற்றினார்.
2023 ஆம் ஆண்டு வெளிவந்த தகவலின் படி, சூடான காற்று பலூனில் அதிக உயரத்தைப் பெற்றதற்கான உலக சாதனையை அவர் படைத்துள்ளார் , மேலும் 1988 ஆம் ஆண்டில் லண்டனில் இருந்து டெல்லிக்கு 23 நாட்களில் பறந்து மைக்ரோலைட் தாங்குதிறன் சாதனையையும் படைத்தார் .
செல்வத்தின் உச்சியில் இருந்து வாடகை வீட்டிற்கு மாறிய சிங்கானியா, இன்றளவும் இது பலருக்கும் விடை தெரியாத கேள்வியாகவே உள்ளது. உலகையே அதிர வைத்த ரேமண்ட் என்ற ஜவுளி சாம்ராஜ்யத்தின் அதிபராக இருந்தவர் இந்த தொழிலதிபர் விஜய்பட் சிங்கானியா. வியாபாரம் பெருகும் போது குடும்பத்தைக் கவனிக்க மறந்துவிட்டார்.
இதனால் தற்பொழுது இவர் தன்னுடைய மகன்களால் கைவிடப்பட்ட வாடகை வீட்டில் வசித்து வருகிறார். இதற்கு காரணம், குடும்பத் தொழிலான ரேமண்ட் குழுமத்தை அவரது இரு மகன்களுக்கு இடையே பிரித்துவிட முடிவு செய்ததே அவரது மிகப்பெரிய தவறு.
மூத்த மகன் மதுபதி சிங்கானியா சிங்கப்பூருக்குச் சென்று குடும்பத் தொழிலில் இருந்து விலகி இருந்தார். இதன் மூலம் இளைய மகன் கௌதம் சிங்கானியா நிறுவனத்தை கைப்பற்றினார். அவர் நிறுவனத்தை கைப்பற்றிய உடனேயே அப்பாவும் மகனும் பிரிந்துவிட்டார்கள்.
இவர்கள் இருவருக்கும் ஏற்பட்ட தகராறு அதிகரித்ததால், விஜய்பட் சிங்கானியா, ரேமண்ட் குழுமத்தில் உள்ள தனது பங்குகள் அனைத்தையும் கௌதமுக்கு மாற்றினார். இத்துடன் அவரும் வீழ்ச்சி அடைந்தார்.இறுதியாக, கௌதம் தனது தந்தையை தனது சொந்த வீட்டிலிருந்து வெளியேற்றினார். விஜய்பட், தற்போது வாடகை வீட்டில் எளிமையான வாழ்க்கை வாழ்ந்து வருகிறார்.