இந்தியன் ரிசர்வ் வங்கியானது குறிப்பிட்ட வங்கிகள் தங்களுடைய விதிமுறைகளை பின்பற்றாமல் மீறியதற்காக அபராதம் மற்றும் உரிமம் ரத்து போன்றவற்றை செய்திருக்கிறது.
அதன்படி, இந்தியன் வங்கி மற்றும் மகேந்திரா & மகேந்திரா நிதி சேவைகள் நிறுவனங்களுக்கு எதிராக இந்தியன் ரிசர்வ் வங்கி ஒழுங்குமுறை நடவடிக்கை மேற்கொண்டுள்ளது. ஆர்பிஐ இன் ஒழுங்குமுறை சட்டத்தின் விதிகளை மீறியதற்காக இந்தியன் வங்கிக்கு 1.61 கோடி ரூபாய் அபராதம் ஆக விதிக்கப்பட்டுள்ளது. மகேந்திரா & மகேந்திரா நிதி நிறுவனத்திற்கு ஆர்பிஐ வங்கி ஆனது 71.30 லட்சம் அபராதம் விதித்திருப்பதையும் உறுதி செய்துள்ளது.
இந்த இரண்டு வங்கிகளுக்கு அபராதம் விதிக்கப்பட்டதை தொடர்ந்து ஜலந்தரை தளமாக கொண்டிருக்கக்கூடிய இம்பீரியல் அர்பன் கூட்டுறவு வங்கியின் உடைய உரிமத்தை இந்தியன் ரிசர்வ் வங்கி முழுவதுமாக ரத்து செய்து உத்தரவு பெற்று இருக்கிறது காரணம் வங்கியில் போதுமான அளவு மூலதனம் இல்லை என்பதாலும் எதிர்பார்த்த அளவு வருவாய் கிடைக்காததாலும் இது போன்ற நடவடிக்கை எடுக்கப்பட்டு இருப்பதாக இந்தியன் ரிசர்வ் வங்கி தரப்பில் தெரிவிக்கப்பட்டிருக்கிறது. இது மட்டுமல்லாது ஏப்ரல் 22 ஆம் தேதி அன்று பஞ்சாப் அரசின் உடைய கூட்டுறவு சங்கங்களின் பதிவாளர் இடம் ஊடல் நடவடிக்கைகளை தொடங்கவும் வங்கியின் செயல்பாடுகளுக்கு ஒரு களைப்பாளரை நியமிக்கவும் கோரிக்கை விடுக்கப்பட்டிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.