RCB மற்றும் LSG அணிக்கு இடையே நடந்த சண்டை!! மன்னிப்பு கேட்டார் லக்னோ அணி வீரர்!!
நடப்பு ஐபிஎல் தொடரில் சமீபத்தில் நடைபெற்ற பெங்களூர் அணிக்கும், லக்னோ அணிக்கும் நடந்த போட்டியில் ஏற்பட்ட சண்டைக்கு லக்னோ அணியை சேர்ந்த வீரர் மன்னிப்பு கேட்டுள்ளார்.
கடந்த மே 1ம் தேதி நடந்த ஐபிஎல் போட்டியில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியும் லக்னோ சூப்பர் ஜெயின்ட்ஸ் அணியும் விளையாடின. இதில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி 18 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
இதையடுத்து போட்டி முடிந்த பிறகு லக்னோ அணியின் பயிற்சியாளர் கவுதம் கம்பீர் அவர்களுக்கும் பெங்களூரு அணியின் வீரர் விராட் கோலிக்கும் சண்டை ஏற்பட்டது. இதற்காக இருவருக்கும் 100 சதவீதம் அபராதம் விதிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
முன்னதாக போட்டியின் போது லக்னோ அணியின் பந்துவீச்சாளர் நவீன் உல் ஹக் அவர்களுக்கும் பெங்களூரு அணியின் வீரர் கோலிக்கும் வாக்குவாதம் ஏற்பட்டது. இதற்காக நவீன் உல் ஹக் அவருக்கு 50 சதவீதம் அபராதம் விதிக்கப்பட்டது. இந்த சண்டைக்காக தற்போது நவீன் உல் ஹக் மன்னிப்பு கேட்டுள்ளார்.
இந்த பிரச்சனை குறித்து அவர், “விராட் கோலி போன்று ஒரு வீரருடன் மைதானத்தில் சண்டை போட்டதை நினைத்து வருத்தப்படுகிறேன். அவருடன் சண்டை போட்டது தவறுதான். இதற்காக இந்திய மக்கள் அனைவரிடமும் நான் மன்னிப்பு கேட்டுக் கொள்கிறேன்” என்று நவீன் உல் ஹக் கூறியுள்ளார்.