இந்த மாவட்டத்திற்கு நாளை உள்ளூர் விடுமுறை ! புகழ்பெற்ற திருவிழாவை முன்னிட்டு மாவட்ட ஆட்சியர் வெளியிட்ட அறிவிப்பு!! 

0
205
#image_title

இந்த மாவட்டத்திற்கு நாளை உள்ளூர் விடுமுறை ! புகழ்பெற்ற திருவிழாவை முன்னிட்டு மாவட்ட ஆட்சியர் வெளியிட்ட அறிவிப்பு!!

நாளை மதுரை மாவட்டத்தில் பிரசித்தி பெற்ற திருவிழா வைபவம் நடைபெற உள்ளதால் ஒருநாள் உள்ளூர் விடுமுறை அளித்து மாவட்ட ஆட்சியர் உத்தரவு பிறப்பித்துள்ளார்.

தமிழ்நாட்டில் புகழ்பெற்ற திருவிழாக்களில் ஒன்று மதுரை மாவட்டத்தில் நடைபெறும் சித்திரை திருவிழா. 15 நாட்கள் நடைபெறும் இந்த திருவிழாவில் மதுரை மாநகரமே விழாக்கோலம் பூண்டிருக்கும். இந்த திருவிழாவில் முக்கியமான நிகழ்வாக மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருக்கல்யாணம், திருத்தேரோட்டம், மற்றும் கள்ளழகர் ஆற்றில் இறங்கும் நிகழ்வு ஆகியன கருதப்படுகிறது. இதில் மீனாட்சி திருக்கல்யாணமும் திருத்தேரோட்டமும் நடைபெற்று முடிந்து விட்டது. இதில் பல்லாயிரக்கணக்கான மக்கள் கலந்துக் கொண்டு மதுரையை ஆட்சி செய்யும் மீனட்சியின் கல்யாணத்தை கண்டுகளித்தனர். தேரோட்டமும் அதனுடன் நடைப்பெற்றது.

அடுத்து இந்த திருவிழாவில் மிகவும் முக்கியமானதாக கருதப்படுவது கள்ளழகர் வைகை ஆற்றில் இறங்கும் நிகழ்வு. அழகர் தனது தங்கையான மீனாட்சிக்கு சீர் செய்யும் பொருட்டு வைகை ஆற்றை கடந்து மதுரைக்கு வருவதாக ஐதீகம். அவர் வரும் போது வைகை ஆற்றில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியதாகவும், வைகையாறு அழகருக்கு வழி விட்டதாகவும், அப்படி இருந்தபோதிலும் திருமணம் முடிந்த பிறகு தான் அழகர் மதுரையை அடைந்ததாக சொல்லப்படுவது உண்டு. இத்தகைய பாரம்பரியத்தை கொண்ட  இந்த நிகழ்ச்சியின் போது லட்சக்கணக்கான  மக்கள் வைகை ஆற்றங்கரையில் குவிந்து கிடப்பர். இதன்படி நேற்று கள்ளழகர் அழகர் கோவிலில் இருந்து மதுரைக்கு புறப்படும் நிகழ்வு தொடங்கியது. நாளை ஆற்றில் இறங்குவார்.

இந்நிலையில் அழகர் ஆற்றில் இறங்கும் நிகழ்வை கண்டுகளிக்கும் வகையில் நாளை மதுரை மாவட்டத்திற்கு ஒருநாள் விடுமுறை அளித்து அம்மாவட்ட ஆட்சியர் உத்தரவு பிறப்பித்துள்ளார்.