IPL: ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணியின் வேகப்பந்து வீச்சாளர் வெளியிட்ட வீடியோ மூலம் csk ரசிகர்களை சீன்டியுள்ளார்.
ஐ பி எல் 2025 ம் ஆண்டுக்கான மெகா ஏலமானது கடந்த மாதம் நடைபெற்று முடிந்தது. அடுத்த ஆண்டு இந்த போட்டி தொடரானது மார்ச், ஏப்ரல், மே ஆகிய மாதங்களில் நடைபெற உள்ளது. இந்நிலையில் பெங்களூர் அணி தக்கவைக்கப்பட்ட வீரரான வேகப்பந்து வீச்சாளர் யஷ் தயாள் ஒரு வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.
அந்த வீடியோ வில் அவர் வெளியிட்ட வீடியோ பதிவில் தானும் ஜாகிர் காணும் தோனியின் விக்கெட்டை வீழ்த்திய காட்சி இடம்பெற்றிருந்தது. இருவரும் ஒரே மாதிரி பந்து வீசி ஒரே மாதிரி விக்கெட் வீழ்த்தியதை சுட்டி காட்டியுள்ளார்.
இந்த வீடியோ மூலம் யஷ் தயாள் தோனியின் விக்கெட்டை வீழ்த்தி விட்டேன் என தற்பெருமை பேசி வருகிறார் என CSK அணி ரசிகர்கள் இது போன்ற ஜாம்பவான்களை ஒரு முறை விக்கெட் வீழ்த்தி அதை சுட்டிக்காட்டி தற்பெருமை கொள்வது தவறான ஒன்று அதுமட்டுமல்லாமல் அவரை அவமதிப்பதாகும் என கூறி வருகின்றனர்.
கடந்த ஆண்டு நடைபெற்ற சென்னை மற்றும் பெங்களூர் இடையிலான நாக் அவுட் போட்டியில் முக்கியமான தருணத்தில் கடைசி ஓவரில் RCB பவுலர் யஷ் தயாள் தோனியின் விக்கெட்டை வீழ்த்தினார் இதனால் பெங்களூர் அணி ப்ளே ஃஆப் சென்றது. இதனை அவர் சுட்டி காட்டி வருவது தவறு என்றும், மீண்டும் நீ தோனியிடம் சிக்கும்போது உனக்கு புரியும் என்றும் ரசிகர்கள் கூறி வருகின்றனர்.