10,12 ஆம் வகுப்பு தனித்தேர்வு.. தமிழகம் முழுவதும் இன்று தொடக்கம்!

Photo of author

By Parthipan K

10 மற்றும் 12 ஆம் வகுப்பு தனித்தேர்வர்களுக்கான தேர்வு தமிழகம் முழுவதும் இன்று தொடங்குகிறது.

10 மற்றும் 12 ஆம் வகுப்பு தனித்தேர்வர்களுக்கான தேர்வு தமிழகம் முழுவதும் இன்று தொடங்குகிறது. இந்த தனித்தேர்வில் 10 மற்றும் 12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வில் தோல்வியடைந்த மாணவர்களும் பங்கேற்று தேர்வு எழுதுகின்றனர். 10 ஆம் வகுப்புக்கான தனித்தேர்வு செப். 26 வரையும், 12 ஆம் வகுப்புக்கான தனித்தேர்வு செப். 28 ஆம் தேதி வரையும் தேர்வு நடக்கிறது.

200க்கும் அதிகமான மையங்களில் நடைபெறும் இந்த தனித்தேர்வில் 35,000 மேற்பட்ட மாணவர்கள் தேர்வு எழுதுகின்றனர். தேர்வு எழுதும் மாணவர்கள் அனைவரும் முகக்கவசம் அணிந்து, சமூக இடைவெளியை பின்பற்றி தேர்வுகளை எழுத ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.