பாஜகவை வீழ்த்த தயார்!! சோனியாகாந்தியின் கீழ் எதிர்க்கட்சிகளின் கூட்டணி!!
ஒரு பக்கம் பாஜக அரசு எதிர்கட்சிகளுக்கு கலக்கம் ஏற்படுத்த தொடர் ரெய்டு அமலாக்கத்துறையினரால் ரெய்டு விட்டு அச்சத்தை குடுத்து வருகிறது. இன்னொரு பக்கம் வரும் ஆண்டு நாடாளுமன்ற தேர்தலில் பாஜகவை வீழ்த்துவதற்காக காங்கிரஸை உள்ளடக்கிய அனைத்து எதிர்க்கட்சிகளும் ஒருங்கிணைந்து அதாவது கிட்டத்தட்ட 24 கட்சிகள் சோனியா காந்தியின் கீழ் ஆலோசனை செய்கிறது.
ஏற்கனவே எதிர்க்கட்சிகளின் ஒன்றிணைந்த முதல் கூட்டம் ஜூன் 23-ந் தேதி பாட்னாவில் நடைபெற்றது என்பது குறிப்பிடத்தக்கது.
இதனைத் தொடர்ந்து பெங்களூர் நகரத்தில் இன்றும் நாளையும் நடைபெறுகிறது.
நாடாளுமன்ற தேர்தலுக்கு வியூகம் வகுப்பதற்காக கர்நாடகா மாநில தலைநகர் பெங்களூரில் இன்று காங்கிரஸை உள்ளடக்கிய அனைத்து எதிர்க்கட்சிகள் ஆலோசனைக் கூட்டம் தொடங்கியது.
பெங்களூரு ஆலோசனை கூட்டத்தில் பங்கேற்க டெல்லியில் இருந்து புறப்பட்ட சோனியா காந்தி, ராகுல் காந்தி இன்றைய கூட்டத்தில் தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின், மேற்கு வங்க முதல்வர் மமதா பானர்ஜி, பீகார் முதல்வர் நிதிஷ்குமார், டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் உள்ளிட்ட 26 தலைவர்கள் சந்திக்கின்றனர்.
பெங்களூரில், தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டலினை பெங்களூர் முதல்வர் மற்றும் கர்நாடகா துணை முதல்வர் டிகே சிவகுமார் ஆகியோர் உற்சாகமாக வரவேற்றனர்.
இன்று மாலை நடைபெறும் கூட்டத்தில் சோனியா காந்தி தலைமையில் முக்கிய ஆலோசனை நடைபெற இருக்கிறது. மேலும் எதிர்க்கட்சி தலைவர்களின் முக்கியமான பேச்சுவார்த்தைகள் நாளை காலை 11 மணிக்கு நடைபெரும் என தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.