பாஜக தனித்து நின்று வெற்றிபெற்றால் உடனே தூக்கில் தொங்க தயார் – அதிமுக தொண்டரின் ஆவேச பேட்டி!! 

0
297
Ready to hang himself if BJP stands alone and wins - AIADMK activist's furious interview!!
Ready to hang himself if BJP stands alone and wins - AIADMK activist's furious interview!!

பாஜக தனித்து நின்று வெற்றிபெற்றால் உடனே தூக்கில் தொங்க தயார் – அதிமுக தொண்டரின் ஆவேச பேட்டி!!

அதிமுக மற்றும் பாஜகவிற்கு இடையே தற்பொழுது விரிசல் ஏற்பட்டுள்ள நிலையில் இது குறித்து அதிமுக தொண்டர்களிடம் தனியார் செய்தி ஊடகமானது இது குறித்து பேட்டி எடுத்தது. அதில் அதிமுக தொண்டர்கள் பலரும் அண்ணாமலையை ஒரு பொருட்டாக கூட எண்ணாமல் பேசியுள்ள வீடியோ தற்பொழுது வைரலாகி வருகிறது. சில தினங்களுக்கு முன்பு மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா அவர்கள் குறித்து ஊழல் செய்தவர் தானே என்று  சுட்டிக்காட்டி அண்ணாமலை பேசியது பெரும் சர்ச்சையை கிளப்பியது.

மேலும் அதிமுகவில் நடந்து முடிந்த மாவட்ட செயலாளர் கூட்டத்தில் கூட இது குறித்து விவாதிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது. மேலிடம் அண்ணாமலை மீது நடவடிக்கை எடுக்கவில்லை என்றால் கட்டாயம் பாஜக உடனான கூட்டணியை கைவிடும் என்பதில் எந்த ஒரு மாற்றமும் இல்லை. அந்த வகையில் அதிமுக தொண்டர்களும் தங்கள் தலைமை சொல்லும் முடிவை தான் நாங்கள் பின்பற்றுவோம் எனக் கூறியுள்ளனர். அந்த வகையில் தொண்டர் ஒருவர், எங்கள் ஆருயிர் அண்ணன் எடப்பாடியார் பாஜக உடனான எந்த ஒரு முடிவு எடுத்தாலும் அதற்கு கட்டுப்பட்டு அதன் வழியே செயல்படுவோம் என்று கூறியுள்ளார்.

இவரைப் போலவே மற்றொருவரும் தலைமையானது, பாஜக உடனான கூட்டணி குறித்து என்ன முடிவு எடுக்கப் போகிறது என்று தெரியவில்லை ஆனால் அண்ணாமலை எல்லாம் ஒரு ஆளு கிடையாது நேற்று பெய்த மழையில் இன்று முளைத்த காளான் தான் அவர் என்று விமர்சித்துள்ளார். அதுமட்டுமின்றி அவர் இருந்த கர்நாடகாவிற்கு சென்று கேட்டால் தான் தெரியும் அவரது லட்சணம் என்னவென்று, அங்கு பல தவறுகளை செய்து விட்டு தப்பிக்க முடியாமல் இங்கு ஓடி வந்து பாஜகவில் இணைந்து கொண்டார்.

மக்களின் கைத்தட்டலுக்காகவும் பாராட்டுக்காகவும் பல வசனங்களை பேசி வருகிறார். அந்த வகையில் தலைமை சொல்வதை கேட்காமல் கட்சியில் இவர் விருப்பத்திற்கு நடந்து வந்தால் கூடிய விரைவில் இவரை கட்சியை விட்டு தூக்கிவிடுவர் என்று தெரிவித்தார்.இவரைப்போல மற்றொரு தொண்டரும், பாஜகவால் தமிழ்நாட்டில் தனித்து நின்று வெற்றி பெற முடியுமா? அவ்வாறு வெற்றி பெற்றால் இதோ இங்க இருக்கும் மரத்தில் நான் தூக்கு மாட்டிக் கொள்கிறேன் இன்று ஆவேசமாக பேசினார்.

இதேபோல அடுத்தடுத்து பேசிய தொண்டர்களும், அரசியல்வாதி என்பதற்கு தகுதியற்ற அண்ணாமலை எங்களுக்கு எதற்கு? கூட்டணிக்கு உண்டான மதிப்பையே உணராதவர். அதேபோல ராஜ்நாத் சிங்கிற்கு தெரிந்த நன்றி கடன் கூட அண்ணாமலைக்கு இல்லை. மிகவும் கேவலமான ஜென்மம் தான் அண்ணாமலை என ஒருவர் மாற்றி ஒருவர் அனைவரும் எதிர்ப்பை தான் தெரிவித்தனர்.அந்தவகையில் அண்ணாமலை குறித்து அதிமுக தொண்டர்கள் கொந்தளித்து பேசிய வீடியோவானது தற்பொழுது வைரலாகி வருகிறது.

Previous articleலிவிங் டு கெதரில் வாழ்ந்த போது இருந்த காதல் கல்யாணத்தில் காணாமல் போனது!! கணவன் மனைவி இருவரும் தர்ணா காரணம் தான் வேறு வேறு !! 
Next articleவந்துவிட்டது தமிழக  காவல் துறையில் புதிய வேலை வாய்ப்பு !! 750 பணியிடங்களுக்கு வெளிவந்த சூப்பர் அறிவிப்பு!!