அனைத்து தொகுதிகளில் உள்ள மாணவர்களை சந்திக்க தயார்!! நடிகர் விஜய்யின் அரசியல் பயணம்!!

Photo of author

By CineDesk

அனைத்து தொகுதிகளில் உள்ள மாணவர்களை சந்திக்க தயார்!! நடிகர் விஜய்யின் அரசியல் பயணம்!!

நடிகர் விஜய் அரசியலுக்கு வருவார் என சில வருடங்களாக கூறப்பட்டு வந்த நிலையில், தற்போது அதற்கான பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. ரசிகர்களுக்கும் அவரின் மீதான எதிர்பார்ப்பு அதிகமாகவே உள்ளது. அவரின் தற்போதைய நடவடிக்கைகளும் அதை உண்மையாக்குவது போல் உள்ளது. ஏற்கனவே விஜயின் மக்கள் இயக்கம் சார்பாக, விலையில்லா விருந்து திட்டம், ரத்ததானம் போன்ற பல்வேறு நற்பணிகள் செய்யப்பட்டு வருகிறது.

இதன் மூலம் விஜயின் மக்கள் இயக்கம், மக்களிடையே நேரடி தொடர்பில் இருந்து வருகிறது. விஜய் அரசியல் பயணத்தை மேற்கொள்ளும் விதமாக  கடந்த ஆண்டு நடைபெற்ற நகர்புற உள்ளாட்சி தேர்தலில் விஜய் மக்கள் இயக்கத்தினர் சிலர் போட்டியிட்டு வெற்றி பெற்றனர். மேலும் ஆன்லைன் மூலம் மக்கள் இயக்கத்திற்கான உறப்பினர் சேர்க்கை தீவிரப்படுத்தப் பட்டுள்ளது.

இது எல்லாமே விஜயின் அரசியல் பயணத்தின் ஒரு பகுதியாகவே பார்க்கப் படுகிறது. மேலும் மக்கள் இயக்கத்தின் மூலமாக அனைத்து தொகுதிகளில் உள்ள வாக்காளர்களின் எண்ணிக்கை, தேர்தலில் வெற்றி பெற்றவர்களின் விபரங்கள், எந்த கட்சியின் சார்பாக வெற்றி பெற்றார்கள், அவர்கள் பெற்ற ஓட்டுகள் போன்ற விபரங்கள் சேகரிக்கப் பட்டுள்ளது.

மேலும் உலக பட்டினி தினமான நேற்று தமிழ்நாடு முழுவதும் உள்ள ஏழை எளிய மக்களுக்கு மக்கள் இயக்கம் சார்பாக உணவு வழங்கப் பட்டது.  இந்நிலையில் தமிழகத்தில் பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானபோதே முதல் இடங்களை பிடித்த மாணவர்களை பாராட்டியதோடு, தமிழகத்தின் அனைத்து பகுதிகளில் உள்ள சிறந்த மதிப்பெண்கள் எடுத்த மாணவர்களை சந்திப்பதாகவும் நடிகர் விஜய் கூறியிருந்தார்.

இதற்காக விஜயின் மக்கள் இயக்கத்தை சேர்ந்தவர்கள் பொதுத்தேர்வில் சிறந்த மதிப்பெண் எடுத்த மாணவர்களை தேர்வு செய்தனர்.அதாவது ஒரு தொகுதிக்கு 6 மாணவர்கள் மற்றும் 2 பெற்றோர்கள் என 234 தொகுதிகளில் மாணவர்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். இந்த மாணவர்களை விஜய் சந்தித்து அவர்களை பாராட்டுவதோடு, அவர்களின்  கல்விக்கான உதவித் தொகைகளையும்  வழங்கவுள்ளதாக தெரிகிறது.

இந்த சந்திப்பு ஜூன் மாதம் நடைபெறும் என தெரிவிக்கபட்டிருந்த நிலையில்,  தற்போது ஜூன் 3ம் தேதி இந்த சந்திப்பு மதுரவாயிலில் உள்ள ஒரு தனியார் மண்டபத்தில் நடைபெறுவதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. இதற்கான ஏற்பாடுகள் தீவிரமாக செய்யப்பட்டு வருகிறது. இந்த நிகழ்ச்சிக்கான அதிகாராபூர்வமான அறிவிப்பு விரைவில் வெளியாகும்.  இதன் மூலம் நாளைய வாக்காளர்களின் ஓட்டுக்களையும், அவரது பெற்றோர்களின் ஆதரவையும் பெறலாம் என மக்கள் இயக்கத்தினர் எதிர்பார்கின்றனர்.