நடிகர் அஜித் கோபத்துடன் அறிக்கை விட இது தான் காரணமா?

Photo of author

By Anand

நடிகர் அஜித் கோபத்துடன் அறிக்கை விட இது தான் காரணமா?

 

தல அஜித் அவர்களின் அடுத்த படமான வலிமை ஹெச்.வினோத் இயக்கத்தில் உருவாகி வருகிறது. நடிகர் அஜித் மற்றும் பல முன்னணி நடிகர்கள் நடித்து வரும் ‘வலிமை’ திரைப்படத்தை போனி கபூர் தயாரிக்கிறார்.இந்நிலையில் இந்தப் படத்தில் இந்தியாவில் படமாக்க வேண்டிய காட்சிகள் பெரும்பாலும் முடிவடைந்து விட்டதாக படக்குழுவினர் தெரிவித்துள்ளனர்.

 

இதையடுத்து வெளிநாட்டில் படமாக்க வேண்டிய ஒரு சண்டைக்காட்சியை எடுக்க விரைவில் படக்குழு வெளிநாடு பயணிக்கவுள்ளது என்று தகவல்கள் வெளியாகியுள்ளன.மேலும் இந்தப் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் விரைவில் வெளியாகவுள்ளதாகவும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.

 

இந்நிலையில் தான் நடிகர் அஜித் அவரது ரசிகர்களுக்கு ஒரு வேண்டுகோள் விடுத்து அறிக்கை வெளியிட்டிருந்தார்.அதாவது படத்தின் அப்டேட் தக்க சமயத்தில் வெளியாகும் என்றும் அது வரை ரசிகர்கள் அமைதி காக்க வேண்டும் என்றும் அதில் தெரிவித்திருந்தார்.குறிப்பாக நடிகர் அஜித் எதற்கும் கோபப் படாமல் தான் உண்டு தன்னுடைய வேலையுண்டு என்று நடந்து கொள்பவர்.இதனாலேயே அவரது ரசிகர்களை தாண்டியும் பொது மக்கள் மத்தியில் நல்ல செல்வாக்கு உள்ளது.

 

இந்நிலையில் அவரையே கோபத்துடன் அறிக்கை விட செய்தது அவரது ரசிகர்கள் என்று சொல்லிக்கொள்ளும் சிலர் செய்த சம்பவங்கள் தான் என்று தெரிய வந்துள்ளது.அதில் முதல் சம்பவமாக சென்னையில் நடைபெற்ற கிரிக்கெட் போட்டியின் போது சில வீரர்களின் பெயரை குறிப்பிட்டு வலிமை அப்டேட் எப்போ என கேட்டதாகவும்,அந்த போட்டியின் போது வலிமை அப்டேட் பற்றிய பதாகைகளை காட்டியதாகவும் கூறப்படுகிறது.

 

அடுத்ததாக தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி பிரச்சாரத்தின் போது சிலர் வலிமை அப்டேட் குறித்து கோஷம் எழுப்பியதாகவும் கூறப்படுகிறது.மேலும் சமீபத்தில் பிரதமர் மோடி சென்னை வந்திருந்த போது நடைபெற்ற கூட்டத்தில் வலிமை அப்டேட் குறித்தும் கோஷம் எழுப்பியதாகவும் கூறப்படுகிறது. இந்த சம்பவங்களால் தான் அஜித் கோபமடைந்து அறிக்கை வெளியிட்டதாக கூறப்படுகிறது.

 

அமைதியாக இருந்த மனிதரையும் அவரது ரசிகர்கள் ஆத்திரமூட்டி விட்டார்களோ என்று சமூக வலைத்தளங்களில் பலர் தங்களது கருத்துக்களையும் தெரிவித்து வருகின்றனர்.