தாக்கல் செய்யப்பட்ட மனு! கொந்தளித்த நீதிமன்றம்!

0
45

தமிழ்நாட்டில் நோய்த்தொற்று பரவல் இரண்டாம் அலைக்கு சட்டசபை தேர்தல் தான் காரணம் என்று சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளை தெரிவித்திருக்கின்றது. தமிழ்நாட்டில் மாநகராட்சி மற்றும் நகராட்சி பேரூராட்சி உள்ளிட்டவற்றுக்கு உள்ளாட்சித் தேர்தலை நடத்த வேண்டும் என்று தெரிவித்து சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளையில் வழக்கு ஒன்று தாக்கல் செய்யப்பட்டது.

மதுரையை சேர்ந்த ரமேஷ் என்பவர் தாக்கல் செய்த இந்த மனுவில் 2016ஆம் ஆண்டு முதல் தேர்தல் நடத்தப்படாமல் இருக்கிறது. மாநிலத்தின் பொருளாதார வளர்ச்சியில் முக்கிய பங்கு வகிப்பது மாநகராட்சி மற்றும் நகராட்சிகளில் தான். ஆகவே மாநகராட்சி மற்றும் நகராட்சி பேரூராட்சிகளுக்கு தேர்தல் உடனடியாக நடத்த உத்தரவிட வேண்டும் என்று அந்த மனுவில் அவர் குறிப்பிட்டிருந்தார்.

இந்த மனுவை நீதிபதிகள் டி.எஸ். சிவஞானம் மற்றும் ஆனந்தி உள்ளிட்டோரின் அவர்கள் நேற்றைய தினம் விசாரணைக்கு ஏற்றுக் கொள்ளப்பட்டது. அந்த சமயத்தில் மனுதாரர் சார்பாக தமிழ்நாட்டில் மாநகராட்சி நகராட்சி பேரூராட்சி தேர்தல்கள் 21 முறை ஒத்தி வைக்கப்பட்டிருக்கிறது. நோய்த்தொற்று நிபந்தனைகளைப் பின்பற்றி தேர்தலை நடத்த உத்தரவிட வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டு இருந்தது.

ஆனாலும் இதனை ஆராய்ந்த நீதிபதிகள் தமிழ்நாட்டில் நோய்த்தொற்று பரவல் இரண்டாம் அலைக்கு காரணம் சட்டசபை தேர்தல் தான் இந்த நிலையில், மறுபடியும் தேர்தல் நடைபெறும் என்றால் பிரச்சாரங்கள் நடக்கும், அரசியல் கட்சியினர் மற்றும் பொதுமக்கள் அதிக அளவில் ஒன்று கூடுவர் நோய்த்தொற்று பரவலுக்கு மீண்டும் இது ஒரு வாய்ப்பாக அமைந்து விடும் என்று தெரிவித்திருக்கிறார்கள்.

தமிழக உள்ளாட்சித் தேர்தல் குறித்து வழக்கு உச்சநீதிமன்றத்தில் நடைபெற்று வருகின்றது. அதில் முடிவு வந்த பின்னர் தான் இந்த வழக்கை விசாரிக்க இயலும் என்று தெரிவித்து வழக்கை தேதி குறிப்பிடாமல் நீதிபதிகள் ஒத்தி வைத்திருக்கிறார்கள்.

இதற்கு முன்னதாக தமிழ்நாட்டில் உள்ளாட்சித் தேர்தல் நடத்தப்படாமல் இருக்கும் ஒன்பது மாவட்டங்களுக்கு செப்டம்பர் மாதம் 15ஆம் தேதிக்குள் தேர்தலை நடத்தி முடித்து முடிவை அறிவிக்க வேண்டும் என்று உச்சநீதிமன்றம் உத்தரவிட்டு இருக்கிறது. அதே சமயத்தில் தேர்தலை நடத்துவதற்கு 6 மாதங்கள் அவகாசம் வேண்டும் என்று உச்ச நீதிமன்றத்தில் இடைக்கால மனு ஒன்று தாக்கல் செய்யப்பட்டு இருக்கிறது என்று சட்டசபையில் தமிழக அரசு தெரிவித்திருக்கிறது.