பொன்னியன் செல்வன் படத்தில் சிம்பு விலகுவதற்கு காரணம்! லேடி சூப்பர் ஸ்டார் தான் வெளியான தகவல்!
தற்போது இயக்குநர் மணிரத்னம் இயக்கத்தில் பிரம்மாண்ட வரலாற்று திரைப்படமாக உருவாகியுள்ள படம் பொன்னியின் செல்வன். மேலும் கல்கியின் நாவலான பொன்னியின் செல்வன் கதையை பல வருடங்கள் தமிழ் சினிமாவில் பல்வேறு நட்சத்திரங்களின் முயற்சிகளுக்கு பின் தற்போது இயக்குநர் மணிரத்னத்தின் மூலம்தான் படமாக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த படத்தில் சியான் விக்ரம், கார்த்தி, ஜெயம் ரவி, ஐஸ்வர்யா ராய், திரிஷா உள்ளிட்டோர் நடித்துள்ளனர். பொன்னியின் செல்வன் படத்தின் முதல் பாகம் வரும் செப்டம்பர் 30 ஆம் தேதி வெளியாகவுள்ளது.சிம்புவின் பொன்னியின் செல்வன் பட வாய்ப்பு பறிபோக நடிகை நயன்தாரா தான் காரணம் தகவல் கசிந்து வருகிறது.
நடிகர் சிம்பு விலக காரணம் இதனிடையே இப்படத்தில் பல்வேறு நடிகர்கள் நடிப்பதாக இருந்து பின் பல்வேறு காரணமாக அவர்கள் இப்படத்தில் இருந்து விலகியதாக சொல்லப்படுகிறது. அப்படி நடிகை நயன்தாரா மற்றும் நடிகர் சிம்பு இப்படத்தில் நடிக்கவிருந்ததாக சொல்லப்படுகிறது.அந்த வகையில் இயக்குநர் மணிரத்னம் இப்படத்தில் நடிகர் சிம்புவை முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க வைக்க முயற்சித்துள்ளார், அவரும் இப்படத்தில் நடிக்க ஒப்புக்கொண்டுள்ளார்.
மேலும் இப்படத்தில் நடிகை நயன்தாராவும் நடிக்க ஒப்பந்தமாகி இருந்த நிலையில் சிம்பு பொன்னியின் செல்வன் படத்தில் நடித்தால் எனக்கு நடிக்க விருப்பம் இல்லை என்றும் நயன்தாரா தெரிவித்துள்ளார்.மேலும் ஜெயம் ரவி, விக்ரம் உள்ளிட்ட நடிகர்களும் சிம்பு நடித்தால் இப்படத்தில் இருந்து விலகுவதாக தெரிவித்தனராம்.பின் இந்த விஷயத்தை கேட்டு தயங்கி கொண்டே சிம்புவிடம் மணிரத்னம் சொன்னதாகவும், இதனால் நடிகர் சிம்பு இப்படத்தில் இருந்து விலகியதாக மூத்த பத்திரிக்கையாளர் ஒருவர் பேசியுள்ளார். இந்த தகவல்லானது எந்த அளவிற்கு உண்மை என்பது தெரியவில்லை.