விநாயகரை வணங்கும் போது தோப்புக்கரணம் போடுவது ஏன்?

Photo of author

By Parthipan K

விநாயகரை வணங்கும் போது தோப்புக்கரணம் போடுவது ஏன்?

Parthipan K

Updated on:

விநாயகரை வணங்கும் போது தோப்புக்கரணம் போடுவது ஏன்-News4 Tamil Online Tamil News

கோவில்களுக்கு வழிபடச் செல்லும் பலரும் விநாயகரின் சன்னிதி முன்னே தோப்புக்கரணம் போட்டு வணங்குவதை வழக்கமாக வைத்திருப்பார்கள். ஆனால் பெரும்பாலோனோருக்கு அதற்கான காரணம் தெரியாது.

அதாவது இந்து மத சடங்குகள் என நாம் முன்னோர்கள் கடைபிடித்து வரும் ஒவ்வொன்றுக்கும் காரணம் என்ன? அதனால் பயன் என்ன? என்பது பற்றிய அறிவியல் பூர்வமான ஆய்வுகள் நடந்து வருகிறது. அதில் இந்த விநாயகருக்கு முன்பு தோப்பு கரணம் போட்டு வணங்குவது தலைச்சிறந்த உடற்பயிற்சி என்று அமெரிக்க விஞ்ஞானிகள் சொல்கிறார்கள்.

‘தோர்பி’ என்பதற்கு ‘கை’ என்றும் அர்த்தம்.அதேபோல் ‘கர்ணம்’ என்பதற்கு ‘காது’ என்றும் பொருள். அதாவது விநாயகருக்கு முன்பு கைகளால் காதைப் பிடித்துக் கொண்டும், நெற்றிப் பொட்டில் குட்டிக் கொண்டும் முழங்காலை மடக்கி, மடக்கி நிமிர செய்வார்கள். இதைத் தான் ‘தோர்பிகர்ணம்’ என்பார்கள். பின்னாளில் அதுவே தோப்புக் கரணம் என்று மாறியது.

விநாயகரை வணங்கும் போது தோப்புக்கரணம் போடுவது ஏன்?

இதற்கு அறிவியல் பூர்வமான பின்னணியானது காதுக்கு அருகிலுள்ள 200 க்கும் மேற்பட்ட நரம்புகள் ஒன்றுடன் ஒன்று பின்னிப் பிணைந்துள்ளன. நாம் செய்யும் தோப்பு காரணத்தின் மூலமாக அதை இழுக்கும் பொழுது, அங்கு ரத்த ஓட்டம் தூண்டப்பட்டு அதிக ரத்தம் தலைப் பகுதிக்குச் செல்கிறது.

மேலும் தோப்பு கரணம் போடும் போது வலது கையால் இடது காதையும், இடது கையால் வலது காதையும் பிடித்து இழுத்து, குனிந்து நிமிரும் பொழுது மூளைக்கு செல்லும் ரத்த ஓட்டம் அதிகமாகி, சிந்தனை ஆற்றலை அதிகரிக்க செய்கிறது.

இதன் மூலமாக ஞாபக சக்தியை அதிகரிக்க வைக்கிறது. இன்னும் பெரும்பாலான பள்ளிகள் மாணவர்கள் தவறு செய்யும்போது அவர்களுக்கு தண்டனையாக தோப்பு கரணம் போட சொல்வதையும் வழக்கமாக கொண்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.