Breaking News

தமிழகத்தில் அண்மையில் தொடரும் வேலை நிறுத்தப் போராட்டங்கள் !!

தமிழகத்தில் அண்மையில் தொடரும் வேலை நிறுத்தப் போராட்டங்கள் !!

தமிழகத்தில் கடந்த சில தினங்களாக போக்குவரத்து சங்கம், மாற்றுதிறனாளிகள், வருமானவரித்துறை, இடைநிலை ஆசிரியர்கள் என எங்கு பார்த்தாலும் அரசின் பல்வேறு தீர்மானங்களுக்கு எதிராக வேலை நிறுத்தப் போராட்டங்கள் தொடர்ந்து வருகின்றன.

அந்த வரிசையில் தற்பொழுது சேலம் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் உள்ள விசைதறித் தொழிலாளர்களும், சிறு, குறு தொழில் நிறுவனங்கள், வணிக கடன்களை விரைவாக வசூலிக்க கொண்டுவரப்பட்டுள்ள வருமான வரி சட்ட திருத்தத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து வேலை நிறுத்தப்போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

இந்த போராட்டத்தில் 5,000 மேற்பட்ட விசைத்தறி தொழிலாளர்கள் கலந்துக்கொண்டுள்ளனர், இதனால் ஜவுளி ஏற்றுமதியில் இழப்பு ஏற்படவும் வாய்ப்புள்ளது.