சென்னை : தமிழகத்தில் பெண்களுக்கு எதிராக ஏற்பட்டு வரக்கூடிய பாலியல் புகார்கள் மற்றும் பாலியல் வன்கொடுமைகளை தவறுக்கும் விதமாகவும் பெண்களுக்கு பாதுகாப்பு அளிக்கும் வகையிலும் தமிழகத்தின் தலைநகரான சென்னையில் புதிய முயற்சி ஒன்றை முன்னெடுக்க அரசு முடிவு செய்திருக்கிறது. அதன்படி, ரெட் பட்டன் ரோபோட்டிக் காப் என்ற புதிய பாதுகாப்பு கருவியை பயன்படுத்த இருப்பதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
ரெட் பட்டன் ரோபோடிக் காப் பயன்கள் :-
சென்னையில் பெண்களுக்கு பாதுகாப்பு இல்லாத இடங்களில் இது போன்ற ரோபோடிக்காப் பயன்படுத்தப்படும் என்றும், அதிலும் குறிப்பாக வணிக வளாகங்கள், ரயில் நிலையங்கள், பேருந்து நிலையம் போன்ற அனைத்து இடங்களிலும் இந்த ரோபோடிக் காப் வைக்கப்படும் என்று சென்னை காவல்துறை அதிகாரிகளால் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், இதில் 360 டிகிரி கேமரா இருப்பதாகவும் தன்னை சுற்றியுள்ள அனைத்தையும் தெளிவாக படம் பிடிக்கும் திறன் இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டதோடு, பெண்களுக்கு ஏதேனும் பிரச்சனை என்றால் உடனடியாக பிரெட் ரோபோடிக்காப் மூலமாக அறிவில் இருக்கக்கூடிய காவல் நிலையத்தில் தொடர்பு கொள்ள முடியும் என்றும் உடனடியாக ரோந்து பணியில் இருக்கக்கூடிய காவலர்கள் அந்த இடத்திற்கு வந்து பாதுகாப்பு வழங்குவர் என்றும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக இந்த ரெட் பட்டன் ரோபோட்டிக் காப்பில் வீடியோ கால் செய்து நேரடியாக நடப்பதை காவல் நிலையத்தில் தெரியப்படுத்தக் கூடிய அமைப்பும் ஏற்படுத்தப்பட்டிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.