வெறும் 7 நாளில் தொந்தி குறைய.. இந்த மாவில் அடை தோசை செய்து சாப்பிடுங்கள்!!

Photo of author

By Divya

வெறும் 7 நாளில் தொந்தி குறைய.. இந்த மாவில் அடை தோசை செய்து சாப்பிடுங்கள்!!

Divya

வயிற்றுப் பகுதியில் தேங்கி இருக்கும் அளவிற்கு அதிகமான கெட்ட கொழுப்பு கரைந்து உடல் எடை கட்டுப்பாட்டில் இருக்க ராகி மாவில் உணவு செய்து சாப்பிடுங்கள்.

ராகியில் கால்சியம்,பொட்டாசியம்,வைட்டமின்கள் நிறைந்து காணப்படுகிறது.கெட்ட கொழுப்பு கரைய,இரத்த சர்க்கரை அளவு கட்டுப்பட இதை உணவாக சாப்பிடலாம்.

தேவையான பொருட்கள்:-

1)ராகி மாவு – ஒரு கப்
2)சின்ன வெங்காயம் – பத்து
3)கறிவேப்பிலை – இரண்டு கொத்து
4)உப்பு சிறிதளவு
5)வர மிளகாய் – இரண்டு
6)தண்ணீர் – தேவையான அளவு

செய்முறை விளக்கம்:-

முதலில் ராகியை தண்ணீர் போட்டு அலசி எடுத்துக் கொள்ள வேண்டும்.பின்னர் இதை வெயிலில் பரப்பி காய வைக்க வேண்டும்.

பிறகு இதை மிக்சர் ஜாரில் போட்டு பவுடர் பதத்திற்கு அரைக்க வேண்டும்.இந்த ராகி மாவை நன்கு சலித்து வைத்துக் கொள்ள வேண்டும்.

அடுத்து சின்ன வெங்காயத்தை பொடியாக நறுக்கி வைத்துக் கொள்ள வேண்டும்.அதன் பிறகு கறிவேப்பிலையை சிறு சிறு துண்டுகளாக நறுக்கி கொள்ள வேண்டும்.அதன் பிறகு இரண்டு வர மிளகாயை கட் செய்து வைத்துக் கொள்ள வேண்டும்.

பிறகு ராகி மாவை ஒரு கிண்ணத்தில் போட்டுக் கொள்ள வேண்டும்.அதன் பிறகு வர மிளகாய்,நறுக்கிய சின்ன வெங்காயம் மற்றும் பொடியாக நறுக்கிய கறிவேப்பிலையை அதில் போட்டு கிளற வேண்டும்.

அதன் பிறகு தேவையான அளவு உப்பு சேர்த்து கலந்துவிட வேண்டும்.அதன் பிறகு தேவையான அளவு தண்ணீர் ஊற்றி நன்றாக பிசய வேண்டும்.

பிறகு அடுப்பில் ஒரு தோசைக்கல்லை வைத்து சூடுபடுத்த வேண்டும்.பிறகு தயாரித்து வைத்துள்ள ராகி மாவை அடை போல் தட்டி கல்லில் போட்டு வேக வைக்க வேண்டும்.தேவைப்பட்டால் சிறிதளவு நல்லெண்ணெய் சேர்த்து சுடலாம்.

இந்த ராகி ரொட்டியை சாப்பிட்டு வந்தால் உடல் எடை சீக்கிரம் குறையும்.உடலில் படிந்துள்ள தேவையற்ற கொழுப்புகள் கரைய இந்த ராகி ரொட்டியை சாப்பிடலாம்.

அதேபோல் ராகி மாவை தண்ணீரில் கொட்டி கரைத்து கொதிக்க வைத்து பனங்கற்கண்டு கலந்து குடிக்கலாம்.ராகியில் தோசை,களி போன்றும் செய்தும் சாப்பிடலாம்.