ஐந்து நிமிடத்தில் இரத்த சர்க்கரை அளவு குறைய.. இந்த பொருளில் டீ செய்து குடியுங்கள்!!

Photo of author

By Divya

உங்களில் பலர் இரத்த சர்க்கரை நோயால் கடும் அவதியடைந்து வருவீர்கள்.இன்றைய காலகட்டத்தில் பெரியவர்களுக்கு மட்டுமின்றி பிறக்கும் குழந்தைகளுக்கும் சர்க்கரை நோய் பாதிப்பு இருக்கிறது.

இனிப்பு உட்கொள்ளுதல்,பரம்பரை பரம்பரையாக வருதல்,உடல் பருமன் போன்ற காரணங்களால் இந்த வியாதி ஏற்படுகிறது.சர்க்கரை வியாதி வந்துவிட்டால் இரத்த சர்க்கரை அளவை கட்டுக்குள் வைத்துக் கொள்வதில் அதிக கவனத்துடன் இருக்க வேண்டும்.சர்க்கரை அளவு மீறிவிட்டால் உயிருக்கு ஆபத்தாகிவிடும்.

இரத்த சர்க்கரை அளவை குறைக்க இஞ்சி கொண்டு தயாரிக்கப்பட்ட பானத்தை பருகலாம்.சளி,இருமல் போன்ற பாதிப்புகளை குணப்படுத்த உதவும் இஞ்சி இரத்த சர்க்கரை அளவை கட்டுக்குள் வைத்துக் கொள்ள பெரிதும் உதவுகிறது.

தேவையான பொருட்கள்:-

1)இஞ்சி துண்டு

2)தண்ணீர்

பயன்படுத்தும் முறை:-

முதலில் ஒரு துண்டு இஞ்சி எடுத்து தோல் நீக்கிவிட்டு பொடியாக நறுக்கி கொள்ளுங்கள்.பிறகு இதை உரலில் போட்டு ஒன்றிரண்டாக தட்டிக் கொள்ளுங்கள்.

அதன் பிறகு அடுப்பில் பாத்திரம் வைத்து 250 மில்லி தண்ணீர் ஊற்றி சூடாக்கி கொள்ளுங்கள்.பிறகு இடித்து வைத்துள்ள இஞ்சி துண்டுகளை அதில் போட்டு மிதமான தீயில் சுண்டும் வரை காய்ச்சவும்.

இந்த டீ 150 மில்லியாக கொதித்து வந்த பிறகு ஒரு கிளாஸிற்கு வடிகட்டி இளஞ்சூட்டில் பருகுங்கள்.இந்த இஞ்சி டீயை காலை மாலை பருகி வந்தால் இரத்தத்தில் உள்ள சர்க்கரை அளவு குறையும்.சர்க்கரை நோயாளிகளுக்கு இந்த டீ உகந்த ஒன்று.

கொலஸ்ட்ரால்,அஜீரணக் கோளாறு உள்ளவர்களுக்கு இஞ்சி டீ நல்ல தீர்வாகும்.ஆனால் நெஞ்செரிச்சல் உள்ளவர்கள் இஞ்சி டீ அருந்துவதை தவிர்க்க வேண்டும்.அதேபோல் உடல் சூடு பிரச்சனை இருப்பவர்கள் இஞ்சி பானத்தை தவிர்க்க வேண்டும்.