உடல் சூடு தணிய கொலஸ்ட்ரால் குறைய.. இந்த விதையை தண்ணீரில் ஊறவைத்து குடிங்க!!

Photo of author

By Divya

உடல் சூடு தணிய கொலஸ்ட்ரால் குறைய.. இந்த விதையை தண்ணீரில் ஊறவைத்து குடிங்க!!

Divya

உங்கள் உடலில் குவிந்து கிடக்கும் கெட்ட கோஸ்ட்ராலை கரைக்க சப்ஜா விதை ஊறவைத்த தண்ணீர் பருகலாம்.தற்பொழுது கோடை காலம் என்பதால் இந்த சப்ஜா விதை தண்ணீர் உடலுக்கு குளிர்ச்சியை தரும்.உடல் சூடு மற்றும் உடல் பருமன் பிரச்சனை இருப்பவர்கள் இந்த சப்ஜா விதை பானத்தை பருகலாம்.

தேவையான பொருட்கள்:-

1)சப்ஜா விதை – ஒரு தேக்கரண்டி
2)இஞ்சி – ஒரு துண்டு
3)தேன் – ஒரு தேக்கரண்டி
4)தண்ணீர் – ஒரு கப்

செய்முறை விளக்கம்:-

கிண்ணம் ஒன்றை எடுத்துக் கொள்ளுங்கள்.அடுத்து அதில் முழுவதும் தண்ணீர் ஊற்றிக் கொள்ளுங்கள்.

அடுத்து ஒரு தேக்கரண்டி சப்ஜா விதையை அதில் போட்டு குறைந்தது 5 மணி நேரத்திற்கு ஊறவையுங்கள்.

அதன் பின்னர் ஒரு துண்டு இஞ்சை தோல் நீக்கிவிட்டு இடித்து சாறு எடுத்து சப்ஜா விதை நீரில் கலக்குங்கள்.

அடுத்து அதில் ஒரு தேக்கரண்டி தேன் ஊற்றி மிக்ஸ் செய்து பருகுங்கள்.இந்த சப்ஜா விதை பானம் உடல் எடையை குறைக்க உதவுகிறது.உடல் சூடு தணிய இந்த சப்ஜா பானத்தை பருகலாம்.

தேவையான பொருட்கள்:-

1)சப்ஜா விதை – ஒரு தேக்கரண்டி
2)தண்ணீர் – ஒன்றரை கிளாஸ்
3)எலுமிச்சை சாறு – 20 மில்லி

செய்முறை விளக்கம்:-

ஒரு கிண்ணத்தை எடுத்து சப்ஜா விதையை போட்டுக் கொள்ளுங்கள்.அடுத்து அதில் ஒன்றரை கிளாஸ் தண்ணீர் ஊற்றி இரவு முழுவதும் ஊறவிடுங்கள்.

மறுநாள் எலுமிச்சம் பழத்தை இரண்டாக நறுக்கி அதன் சாறை சப்ஜா விதை நீரில் பிழிந்து பருகுங்கள்.இந்த சப்ஜா நீர் உடலில் இருக்கின்ற கெட்ட கொழுப்பை கரைக்க உதவுகிறது.

தேவையான பொருட்கள்:-

1)சப்ஜா விதை – ஒரு தேக்கரண்டி
2)ஆப்பிள் சீடர் வினிகர் – ஒரு தேக்கரண்டி
3)தண்ணீர் – ஒரு கிளாஸ்

செய்முறை விளக்கம்:-

சப்ஜா விதையை தண்ணீரில் ஊறவைத்துக் கொள்ள வேண்டும்.இவை நன்றாக ஊறி வந்த பிறகு ஒரு தேக்கரண்டி ஆப்பிள் சீடர் வினிகர் சேர்த்து பருக வேண்டும்.

இதை தொடர்ந்து செய்து வந்தால் உடலில் படிந்த கெட்ட கொழுப்புகள் கரைந்துவிடும்.அதேபோல் பட்டை தூளுடன் சப்ஜா விதை சேர்த்த தண்ணீரை பருகி வந்தால் உடல் எடை கட்டுப்படும்.