அதிகப்படியான மன அழுத்தம் பதட்டம் குறைய.. பேரிச்சம் பழத்தை இப்படி எடுத்துக் கொள்ளுங்கள்!!

Photo of author

By Rupa

அதிகப்படியான மன அழுத்தம் பதட்டம் குறைய.. பேரிச்சம் பழத்தை இப்படி எடுத்துக் கொள்ளுங்கள்!!

Rupa

 

அனைவருக்கும் மன அழுத்தம் ஏற்படுவது இயல்பான ஒன்று தான்.உடல் மற்றும் மனதளவில் பாதிக்கப்பட்டால் மன அழுத்தம் ஏற்படுகிறது.மன அழுத்தம் மற்றும் மன உளைச்சல் அதிகமானால் எதிர்மறை எண்ணஙகள் மற்றும் தவறான எண்ணங்கள் மனதில் தோன்றும்.எனவே மன அழுத்தம் ஏற்படுவதை குறைக்க இந்த இயற்கை மருத்துவத்தை தொடர்ந்து பின்பற்றி வரவும்.

 

தேவையான பொருட்கள்:

 

1)பேரிச்சம் பழம் – 10

2)நெய் – ஒரு தேக்கரண்டி

 

செய்முறை விளக்கம்:

 

அடுப்பில் ஒரு இரும்பு பாத்திரம் வைத்து ஒன்று அல்லது இரண்டு தேக்கரண்டி நாட்டு பசு நெய் சேர்த்து சூடு படுத்தவும்.

 

பிறகு 10 பேரிச்சம் பழத்தை எடுத்து அதன் விதையை நீக்கிவிட்டு சூடாகி கொண்டிருக்கும் நெயில் போட்டு வதக்கவும்.குறைவான தீயில் இரண்டு நிமிடங்களுக்கு வதக்கி அடுப்பை அணைக்கவும்.பிறகு இதை ஆறவிட்டு ஒரு பாட்டிலில் போட்டு சேமித்துக் கொள்ளவும்.

 

பிறகு அடுப்பில் பாத்திரம் ஒன்றை வைத்து 150 மில்லி பால் ஊற்றி சூடாக்கவும்.பிறகு நெயில் வதக்கிய பேரிச்சம் பழத்தை பாலில் போட்டு கொதிக்க வைத்து குடித்தால் மன அழுத்தம்,பதட்டம் குறையும்.

 

தேவையான பொருட்கள்:

 

1)பேரிச்சம் பழம்

2)தேன்

 

செய்முறை விளக்கம்:

 

ஒரு கண்ணாடி ஜாரில் 100 கிராம் அளவிற்கு விதை நீக்கிய பேரிச்சம் பழத்தை போட்டு 150 மில்லி தேன் கலந்து ஊறவிடவும்.

 

தேனில் ஊறவைத்த பேரிச்சம் பழத்தை தினமும் சாப்பிட்டு வந்தால் மன அழுத்தம்,பதட்டம்,உடல் சோர்வு உள்ளிட்டவை நீங்கி உடல் ஆரோக்கியமாக இருக்கும்.