நம் உடலில் உயர் இரத்த அழுத்த பாதிப்பு ஏற்பட்டால் அவை கடுமையான பின்விளைவுகளை உண்டாக்கிவிடும்.இன்று பெரும்பாலானோர் உயர் இரத்த அழுத்த பாதிப்பிற்கு ஆளாகி வருகின்றனர்.உயர் இரத்த அழுத்தம் திடீரென்று உயர்ந்தால் இதய ஆரோக்கியம் முழுமையாக பாதிக்கப்பட்டுவிடும்.எனவே உயர் இரத்த அழுத்தத்தை எப்பொழுதும் கட்டுக்குள் வைத்துக் கொள்வது உடல் ஆரோக்கியத்திற்கு நல்லது.ஆரோக்கியமற்ற வாழ்க்கை முறை தான் உயர் இரத்த அழுத்தம் ஏற்பட முக்கிய காரணமாக உள்ளது.
தேவையான பொருட்கள்:-
1)முருங்கை கீரை – ஒரு கப்
2)முருங்கை பூ – கால் கப்
3)முருங்கை விதை – கால் கப்
4)வர மிளகாய் – நான்கு
5)உளுந்து பருப்பு – 20 கிராம்
6)மல்லி விதை – 20 கிராம்
7)பூண்டு வற்றல் – நான்கு
செய்முறை விளக்கம்:-
முதலில் முருங்கை கீரை,முருங்கை பூ மற்றும் முருங்கை விதையை வெயிலில் நன்றாக உலர்த்தி காய வைத்துக் கொள்ளுங்கள்.
இந்த மூன்று பொருட்களும் நன்றாக காய வேண்டும்.பிறகு இதை வாணலியில் போட்டு லேசாக வறுத்துக் கொள்ள வேண்டும்.
அடுத்து நான்கு வர மிளகாய்,20 கிராம் உளுந்து பருப்பு மற்றும் 20 கிராம் கொத்தமல்லி விதையை தனி தனியாக வறுத்தெடுத்துக் கொள்ள வேண்டும்.
பிறகு நான்கு பூண்டு வற்றலை வறுபட்ட கலவையில் போட்டு கலந்துவிட வேண்டும்.இவற்றை நன்றாக ஆறவைத்து மிக்சர் ஜாரில் போட்டு பவுடர் பதத்திற்கு அரைத்துக் கொள்ள வேண்டும்.
பின்னர் இதை ஒரு ஒரு தட்டில் கொட்டி ஆறவிட வேண்டும்.பிறகு இதை காற்றுப்புகாத டப்பாவில் கொட்டி சேமிக்க வேண்டும்.
பின்னர் அடுப்பில் பாத்திரம் வைத்து ஒரு கப் தண்ணீர் ஊற்றி சூடுபடுத்த வேண்டும்.அதன் பிறகு அரைத்த முருங்கை கீரை பவுடர் ஒரு தேக்கரண்டி அளவு போட்டு மிதமான தீயில் கொதிக்க வைக்க வேண்டும்.
அடுத்து கால் தேக்கரண்டிக்கும் குறைவாக மஞ்சள் தூள் சேர்த்துக் கொள்ளவும்.இதை நன்றாக கொதிக்க வைத்து அடுப்பை அணைக்க வேண்டும்.பிறகு இந்த பானத்தை ஒரு கிளாஸிற்கு வடிகட்டி பருகவும்.
தினமும் இந்த பானம் செய்து பருகி வந்தால் உயர் இரத்த அழுத்தம்,சர்க்கரை,கொலஸ்ட்ரால் உள்ளிட்ட பாதிப்புகள் முழுமையாக குணமாகும்.