சட்டசபையில் பேச அனுமதி மறுப்பு! அதிமுக எம்எல்ஏக்கள் இன்று உண்ணாவிரத போராட்டம்!

0
153

அஇஅதிமுக இடைக்கால பொதுச்செயலாளராக தேர்வு செய்யப்பட்டுள்ள எடப்பாடி பழனிச்சாமி சட்டசபை எதிர்க்கட்சித் துணைத் தலைவர் பன்னீர்செல்வத்துக்கு பதிலாக முன்னாள் அமைச்சர் உதயகுமாரை எதிர்க்கட்சித் துணைத் தலைவராக நியமிக்குமாறு சபாநாயகரிடம் கடிதம் வழங்கினார். ஆனால் சபாநாயகர் இந்த கடிதத்தை ஏற்றுக் கொள்ளவில்லை

இதனை கண்டிக்கும் விதமாக சட்டசபையில் நேற்று கேள்வி நேரத்தில் பேச முயற்சி செய்தார்கள் அதிமுகவை சேர்ந்தவர்கள். ஆனால் சபாநாயகர் அனுமதி வழங்காததால் அவருடைய இருக்கை முன்பு அமர்ந்து கருணா போராட்டத்தில் ஈடுபட்டனர். மேலும் சபை காவலர்களால் அதிமுகவினர் வெளியேற்றப்பட்டனர்.

பேசுவதற்கு அனுமதி வழங்க மறுத்ததை கண்டிக்கும் விதமாக சென்னையில் வள்ளுவர் கோட்டம் அருகே இன்று காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரையில் எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிச்சாமி தலைமையில் அதிமுகவின் சட்டசபை உறுப்பினர்கள் உண்ணாவிரத போராட்டத்தை நடத்தப் போவதாக கட்சியின் தலைமை அறிவித்திருக்கிறது. இந்த உண்ணாவிரதத்தில் சென்னை மாவட்ட நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் பங்கேற்க அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

இந்த உண்ணாவிரதத்திற்கு அனுமதி கோரி சென்னை மாநகர காவல் துறை ஆணையர் அலுவலகத்தில் மனு கொடுக்கப்பட்டுள்ளது. காவல்துறையினர் அனுமதி கொடுக்காவிட்டாலும் இந்த போராட்டம் நடத்தப்படும் என்று கட்சி நிர்வாகிகள் சார்பாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Previous articleதிடீர்னு ரிலீஸ் தேதிய மாத்தும் வாரிசு படக்குழு… ஆனாலும் ரசிகர்கள் ஹேப்பிதான்!
Next articleஆம்னி பேருந்து கட்டணம் பல மடங்கு உயர்வு! பாஜக தலைவர் கண்டனம்!