திடீர்னு ரிலீஸ் தேதிய மாத்தும் வாரிசு படக்குழு… ஆனாலும் ரசிகர்கள் ஹேப்பிதான்!

0
172

திடீர்னு ரிலீஸ் தேதிய மாத்தும் வாரிசு படக்குழு… ஆனாலும் ரசிகர்கள் ஹேப்பிதான்!

விஜய்யின் வாரிசு திரைப்படமும் அஜித்தின் துணிவு திரைப்படமும் பொங்கலுக்கு ரிலீஸ் ஆகின்றன.

அடுத்த ஆண்டு பொங்கல் தமிழ் சினிமா ரசிகர்களுக்கு டபுள் ட்ரீட்டாக அமையவுள்ளது. காரணம் அஜித், விஜய் ஆகிய இருவரின் படங்களும் ரிலீஸ் ஆக உள்ளன.

விஜய்யின் 66 ஆவது படமான ‘வாரிசு’ படத்தை இயக்குனர் வம்சி இயக்கி வருகிறார். இந்த படத்தை தெலுங்கின் பிரபல தயாரிப்பாளர் தில்ராஜு தயாரிக்கிறார். கதாநாயகியாக ராஷ்மிகா மந்தனா நடிக்கிறார். படத்தில் விஜய்யோடு சரத்குமார், பிரபு, பிரகாஷ் ராஜ் உள்ளிட்ட பலர் நடிக்கின்றனர். தமன் இசையமைக்கிறார். இந்த படத்தின் விறுவிறுப்பாக நடந்து வருகிறது. படம் அடுத்த ஆண்டு ஜனவரி மாதம் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ரிலீஸ் ஆகும் என சில மாதங்களுக்கு முன்னதாகவே அறிவிக்கப்பட்டது.

நேர்கொண்ட பார்வை மற்றும் வலிமை ஆகிய படங்களின் வெற்றிக்குப் பிறகு H வினோத் இயக்கத்தில் அஜித் தனது 61வது நடித்தது வருகிறார். H வினோத்துடன் மூன்றாவது முறையாக  இணைந்துள்ள இந்த படத்துக்கு தற்காலிகமாக ‘AK 61’ என்று அழைக்கப்பட்டு வருகிறது. படத்தில் மஞ்சு வாரியர் மற்றும் சமுத்திரக்கனி ஆகியோர் முக்கிய வேடத்தில் நடித்து வருகின்றனர். இந்த படத்தின் ஷூட்டிங் முடிந்து தற்போது 2023 ஆம் ஆண்டு பொங்கலுக்கு ரிலீஸாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

முதலில் துணிவு திரைப்படம் ஜனவரி 12 ஆம் தேதி வியாழக்கிழமை ரிலீஸ் ஆகும் என்றும், வாரிசு ஜனவரி 13 ஆம் தேதி வெள்ளிக்கிழமை ரிலீஸாகும் என்றும் அறிவிக்கப்பட்டு இருந்தது.

ஆனால் இப்போது வாரிசு திரைப்படம் துணிவு திரைப்படத்துகு ஒரு நாள் முன்பாகவே ஜனவரி 11 ஆம் தேதி புதன் கிழமையே ரிலீஸ் செய்ய திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இதனால் இப்போது  விஜய் ரசிகர்கள் இப்போது இரண்டு நாட்கள் முன்னதாகவே படத்தை பார்த்துவிடலாம் என்ற குஷியில் உள்ளனர்.