இரவு 11 மணிக்கு மேல் எந்த கடைகளும் செயல்படக் கூடாது என போலீசார் அறிவுறுத்தி வரும் நிலையில், கன்னியாகுமரி மாவட்டத்தில் டீக்கடை வைத்திருக்கக்கூடிய பஷீர் என்பவர் இது தொடர்பாக மதுரை உயர்நீதிமன்ற நிலையில் மனு தாக்கல் செய்திருக்கிறார்.
அந்த மனுவில் குறிப்பிடப்பட்டிருப்பதாவது :-
பஷீர் அவர்கள் இந்த மனுவில் தான் டீக்கடை நடத்திக் கொண்டிருப்பதாகவும் இரவு 11 மணிக்கு டீக்கடையை மூடும்படி போலீசார் வற்புறுத்துவதாகவும் தெரிவித்திருக்கிறார். மேலும் இரவு 11 மணிக்கு பிறகும் டீக்கடையை நடத்துவதற்கான அனுமதி வேண்டும் என அந்த மனுவில் டீக்கடை உரிமையாளர் பஷீர் அவர்கள் தெரிவித்திருக்கிறார்.
இதனைத் தொடர்ந்து இந்த வழக்கினை நேற்று நீதிமன்றத்தில் விசாரணை செய்த பொழுது தெரிவித்திருப்பதாவது :-
இந்த வழக்கினை விசாரித்த நீதிபதிகள் 24 மணி நேரமும் டீக்கடைகளை தொடர்ந்து நடத்துவதற்கான அரசாணை தற்போது நடைமுறையில் உள்ளது என்றும் அப்படி இருக்கும் பொழுது 11 மணிக்குள் டீக்கடையை மூட வேண்டும் என வற்புறுத்துவது தவறான விஷயம் என்றும் குறிப்பிட்டிருக்கின்றனர். அதோடு இரவு 11 மணிக்கு மேல் டீக்கடையை மூட வேண்டும் என போலீசார் கட்டாயப்படுத்துவது சரியானது அல்ல என்றும் டீக்கடையை 24 மணி நேரமும் தொடர்ந்து நடத்திக் கொள்ளலாம் என்றும் மதுரை உயர்நீதிமன்ற கிளையில் தமிழக அரசாணையை சுட்டிக்காட்டி நீதி வழங்கப்பட்டிருக்கிறது.
இனி தமிழகத்தில் உள்ள அனைத்து டீக்கடைகளும் 24 மணி நேரமும் செயல்படலாம் என்றும் அவர்களுக்கு போலீசாரால் எந்தவித தொந்தரவும் இருக்காது என்றும் தெரிவிக்கப்பட்டிருக்கிறது.