வெளிநாட்டில் வேலை பார்த்து வரும் மகன் இறப்பில் சந்தேகம்!! உறவினர்கள் சாலை மறியல்!!

Photo of author

By Savitha

கள்ளக்குறிச்சி அருகே வெளிநாட்டில் வேலை செய்த தனது மகன் இறப்பில் சந்தேகம் உள்ளதாக கூறி பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.இதனால் கள்ளக்குறிச்சி திருவண்ணாமலை மாநில நெடுஞ்சாலையில் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.

கள்ளக்குறிச்சி மாவட்டம் சங்கராபுரம் அருகே உள்ள ஆலத்தூர் கிராமத்தைச் சார்ந்தவர் சக்திவேல் மகன் மணிகண்டன் என்பவர். கடந்த இரண்டு மாதத்திற்கு முன்பு சிங்கப்பூர் நாட்டிற்கு கூலி வேலைக்கு சென்றுள்ளார்.

அங்கு தூக்கிட்டு தற்கொலை செய்ததாக கூறப்படும் நிலையில் சிங்கப்பூர் இருந்து சொந்த ஊருக்கு உடல் அனுப்பி வைத்தனர். உடலை பெற்ற உறவினர்கள் இறப்பில் சந்தேகம் உள்ளதாக கூறி சொந்த கிராமமான ஆலத்தூர் பேருந்து நிலையத்தில் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இதனால் கள்ளக்குறிச்சி, திருவண்ணாமலை மாநில நெடுஞ்சாலையில் அரை மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. தகவல் அறிந்து வந்த கள்ளக்குறிச்சி காவல்துறை பேச்சுவார்த்தை நடத்தி விசாரணை செய்து உரிய நடவடிக்கை எடுப்பதாக கூறியது அடுத்து பொதுமக்கள் அங்கிருந்து கலந்து சென்றனர்.