சென்னை: கார்த்திக் சுப்புராஜ் தற்போது இயக்கிய ரெட்ரோ திரைப்படம் திரைக்கு வர உள்ளது. இந்த படத்தில் பூஜா ஹெக்டே கதாநாயகியாக நடித்துள்ளார். மேலும் இந்த படத்தில் ஜோஜூ ஜார்ஜ், கருணாகரன், ஜெயராம் ஆகியோர் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளனர். மேலும் இந்த படத்தை சூரியாவின் 2டி மற்றும் ஸ்டோன் பெஞ்ச் என இரு நிறுவனம் இணைந்தது தயாரித்துள்ளார்.
இந்த படத்தில் சந்தோஷ் நாராயணன் இசை அமைத்துள்ளார். மேலும் இந்த படத்தில் சூர்யா இரண்டு வேடங்களில் நடித்து இருபதாக தகவல் வெளியகியுள்ளது. இந்த படத்தின் டைட்டில் கடந்த வருடம் நவம்பர் மாதம் 25-ம் தேதி வெளியடப்பட்டது. நடிகை ஸ்ரேயா இந்த திரைப்படத்தில் ஒரு பாடலுக்கு சிறப்பு நடனம் ஆடியுள்ளார்.
மேலும் இந்த படத்தில் காதல் மற்றும் அதிரடி சண்டை படமாக இருக்கும் என இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ் கூறியுள்ளார். இந்த படம் மே மாதம் 1-ம் தேதி தொழிலாளர் தினம் அன்று வெளியாகும் என இயக்குனர் தெரிவித்துள்ளார்.