#BreakingNews:சசிகலா சிறையிலிருந்து விடுதலையாகும் நாள் வெளியீடு:! பெங்களூர் சிறைத் துறையின் அதிகாரபூர்வத் தகவல்!

Photo of author

By Pavithra

#BreakingNews:சசிகலா சிறையிலிருந்து விடுதலையாகும் நாள் வெளியீடு:! பெங்களூர் சிறைத் துறையின் அதிகாரபூர்வத் தகவல்!

அதிமுக கட்சி பிரமுகரான சசிகலா சொத்து குவிப்பு வழக்கில் கைது செய்யப்பட்டு பெங்களூரில் உள்ள சிறையில் அடைக்கப்பட்டார்.இவருக்கு 10 கோடி ரூபாய் அபராதம் விதித்தும் நான்கு ஆண்டு சிறை தண்டனையும் வழங்க கோரி நீதிமன்றம் உத்தரவிட்டது.
இந்நிலையில் சில மாதங்களுக்கு முன்பாக சசிகலா சுதந்திர தினத்திற்கு முன்பே விடுதலை ஆவார் என்ற செய்தி வைரல் ஆகியது.

இவர் சிறையிலிருந்து வெளியே வந்தால் அதிமுக அரசியலில் நிறைய மாற்றங்கள் ஏற்படும் என்று அரசியல் ஆர்வலர்கள் தீவிர எதிர்பார்ப்பில் இருந்தனர்.
ஆனால் ஆகஸ்ட் 14ம் தேதி விடுதலையாவது தனக்கு விருப்பமில்லை என்று அவரே கூறியிருப்பதாக செய்திகள் வெளிவந்தன.மேலும் செப்டம்பர் மாதம் இறுதியில் சசிகலா விடுதலை ஆவார் என்று எதிர்பார்க்கப்பட்டது.

ஆனால் தற்போது,வருகின்ற ஜனவரி 27 ஆம் தேதி சசிகலா விடுதலை ஆவார் என்று பெங்களூர் சிறை துறை சார்பில் தகவல் வெளிவந்துள்ளது.
பெங்களூரைச் சேர்ந்த சமூக ஆர்வலர் நரசிம்மமூர்த்தி,
சசிகலாவின் விடுதலையைக் குறித்து ஆர்டிஐ மூலம் கேள்வி எழுப்பியிருந்தார்.இவரின் கேள்விக்கு பதில் அளித்திருக்கும் பெங்களூர் சிறை துறை நிர்வாகம் வருகின்ற ஜனவரி 27 ஆம் தேதி சசிகலா விடுதலை ஆகலாம் என அதிகாரப்பூர்வமான தகவல் ஒன்றினை அனுப்பியுள்ளது.