இனி இந்த 11 நகரங்களில் ஜியோவின் 5ஜி சேவை கிடைக்கும்…உங்கள் நகரமும் இந்த பட்டியலில் உள்ளதா ?

0
217

இந்தியாவின் மிகப்பெரிய தொலைத்தொடர்பு நிறுவனங்களில் ஒன்றான ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம் கடந்த டிசம்பர் மாதம் 28ம் தேதி புதன்கிழமையன்று கிட்டத்தட்ட 11 நகரங்களில் தனது ட்ரூ 5ஜி சேவையை அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த நகரங்களில் உத்தரபிரதேசத்தின் தலைநகரான லக்னோ, நாசிக், அவுரங்காபாத், சண்டிகர், மொஹாலி, திருவனந்தபுரம், மைசூர், பஞ்ச்குலா, ஜிராக்பூர், கரார் மற்றும் டெராபஸ்ஸி ஆகிய நகரங்கள் அடங்கும். இனிமேல் இந்த நகரங்களில் உள்ள ஜியோ வாடிக்கையாளர்களுக்கு எவ்வித கட்டணமுமின்றி 1 ஜிபிபிஎஸ் வேகத்தில் அன்லிமிடெட் டேட்டா கிடைக்கும்.India's Jio to splash $25bn on achieving nationwide 5G coverage by end of  2023 | TelecomTV

தற்போது ஜியோவின் 5 ஜி சேவை அறிமுகப்படுத்தப்பட்டுள்ள இந்த 11 நகரங்களும் நாட்டின் முக்கியமான நகரங்களாக இருப்பதால் இந்த சேவை வழங்கப்பட்டுள்ளது. இனிமேல் இங்குள்ள பயனர்கள் வேகமான நெட்வொர்க், செயற்கை நுண்ணறிவு, கேமிங், ஹெல்த்கேர், விவசாயம், ஐடி, இ-கவர்னன்ஸ், கல்வி, ஆட்டோமேஷன் போன்றவற்றை பயன்படுத்தி பல துறைகளிலும் வளர்ச்சி அடையலாம். இதற்கு முன்னர் ஜியோ நிறுவனம் அதன் ட்ரூ 5ஜி சேவையை மத்திய பிரதேசத்தில் அறிமுகப்படுத்தியது, இதனை முதல்வர் சிவராஜ் சிங் சவுகான் உஜ்ஜெய்னியில் தொடங்கி வைத்தார்.Jio 5G के लिए चाहिए होगा नया SIM? कंपनी ने बताया 5G सर्विस के लिए क्या करना  होगा - Jio 5G SIM Jio True 5G Will Work On 4G SIM Jio 5G

மேலும் ஜியோ நிறுவனம் இதற்கு முன்பு தனது ஜியோ ட்ரூ 5ஜி சேவையை நவம்பர் 25 அன்று குஜராத்தின் 33 மாவட்டங்களில் அறிமுகப்படுத்தியது. இது தவிர புனே, டெல்லி போன்ற மெட்ரோ நகரங்களில் இந்த சேவை ஏற்கனவே செயல்பாட்டில் இருந்து வருகிறது.

Previous article#BREAKING:அரசு அலுவலகங்கள் மற்றும் பள்ளிகளுக்கு விடுமுறை! எந்த தேதியில் தெரியுமா?
Next articleஅதிவேக பந்து வீச்சாளர்! இந்திய கிரிக்கெட் வரலாற்றில் புதிய சாதனை படைத்த உம்ரான் மாலிக்!