விமான விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு தலா ரூ.10 லட்சம் நிவாரணம்..!

Photo of author

By Parthipan K

விமான விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு தலா ரூ.10 லட்சம் நிவாரணம்..!

Parthipan K

கோழிக்கோடு: விமான விபத்தில் பலியானவர்களுக்கு நிவாரண உதவி வழங்குவது குறித்து கேரள மாநில முதல்வர் பினராயி விஜயன் மற்றும் ஏர் இந்தியா விமான சேவை நிறுவன அதிகாரிகள் இன்று திருவனந்தபுரத்தில் செய்தியாளர்களை சந்தித்தனர்.

ஏர் இந்தியா விமான சேவை நிறுவனம் சார்பில், கோழிக்கோடு விமான விபத்தில் பலியானவர்களின் குடும்பங்களுக்கு தலா ரூ.10 லட்சம் நிவாரணத் தொகையாக வழங்கப்படும். மேலும், படுகாயம் அடைந்தவர்களுக்கு தலா ரூ.2 லட்சமும், லேசான காயமடைந்தவர்களுக்கு ரூ.50 ஆயிரம் வழங்கப்படும் என்று மத்திய விமானப் போக்குவரத்துத்துறை அமைச்சர் ஹர்தீப் சிங் அறிவித்துள்ளார்.

விமான விபத்தில் உயிரிழந்த ஒருவருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனைத்தொடர்ந்து மீட்புப் பணியில் ஈடுபட்டவர்களை தனிமைப்படுத்திக் கொள்ள அறிவுறுத்தியுள்ளோம் என்றும் கேரள முதல்வர் பினராயி விஜயன் கூறினார்.