அறுபடை வீடுகளில் முதல் வீடான திருப்பரங்குன்றத்தில் மேலுள்ள சிக்கந்தர் தர்காவில் சமீபத்தில் ஆடு, சேவல் பழி கொடுப்பதாக கூறி ஊர்வலம் சென்றிருந்தனர். இந்தத் திடீர் செயலால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. மேலும், தோழர்களாக பழகிய இந்து, முஸ்லிம் அமைப்பினர் இடையே பெரும் விரிசலை ஏற்படுத்தியுள்ளது இந்நிகழ்வு. மேலும் திமுக கட்சியை சேர்ந்த இஸ்லாமிய இயக்கத்தினர் மலைக்கு பிரியாணி எடுத்து சென்று சாப்பிட்டதாகவும் சர்ச்சை எழுந்திருந்தது.
அதைத் தொடர்ந்து சமீபத்தில் இந்து சமய மதுரை ஆதீனம் சுவாமிகளை மலைக்கு மேல் உள்ள காசி விஸ்வநாதர் கோயிலுக்கு செல்ல போலீசார் தடை விதித்திருந்தனர். அதனைத் தொடர்ந்து இந்து, முஸ்லிம் இடையேயான சகோதரத்துவம் அங்கு குறைந்து கொண்டே வருகிறது. இங்கு ஏதேனும் சதி வேலை நடக்கிறதா? என்ற கணிப்பில் போலீசார் விசாரித்து வருகின்றனர். மேலும், ஏற்கனவே சிக்கந்தர் கோயில்களில் என்ன நடைமுறை நடந்து வந்தது? என்ற கோணத்திலும் விசாரணை நடத்தி வருகின்றனர்.
பழைய முறைபடியே அங்கு வழிபாடு நடத்த வழி வகுக்குமாறு போலீசார் திட்டமிட்டுள்ளனர். இதைத்தொடர்ந்து பல்வேறு மக்களும் பல விதமாக மத அடிப்படையிலான கருத்துக்களை முன்வைத்து வருகின்றனர். அதில் பலரும் திருப்பரங்குன்றம் மலை பற்றி சங்க கால இலக்கியங்களில் குறிப்பிடப்பட்டுள்ளன. ஆனால் இந்த சிக்கந்தர் தர்காவிற்கான சான்று எங்கும் புலப்படவில்லை. தொல்லியல் ஆய்வாளர்களை வைத்து அந்த தர்காவின் அறிவியல் உண்மையை வெளிக்கொண்டு வருமாறு பரிந்துரைத்து வருகின்றனர். மேலும் சிலர் பழி கொடுக்காமல் அவரவர் கொள்கை அடிப்படையில் சமத்துவமாக அவரவர் தெய்வத்தை வணங்க வேண்டும் எனவும் பதிவிட்டு வருகின்றனர். குறிப்பிட்ட கட்சிகளின் தூண்டுதால்தான் அங்கு பரபரப்பு நடைபெற்று வருவதாகவும் கூறியுள்ளனர்.