கிட்னியில் கல்லா? இந்த பழத்தை சாப்பிடுங்க போதும்

0
171

கிட்னியில் கல்லா? இந்த பழத்தை சாப்பிடுங்க போதும்

இந்த நவீன காலத்தில் நாம் உண்ணும் உணவு வகைகள் மாறி வருவதால் நாளுக்கு நாள் புதிய புதிய நோய்களும் பரவி வருகின்றன.நடுத்தர வயது முதல் இளம் வயதினர் வரை பெரிய பிரச்சனையாக இருப்பது சிறுநீரகத்தில் கல் உருவாகுவது தான்.இதற்காக அலோபதி மருத்துவத்தில் தீர்வு இருந்தாலும் பெரும்பாலோனோர் இயற்கை முறைப்படி சரி செய்ய நினைப்பர்.அவர்களுக்கெல்லாம் வரப்பிரசாதமாக அமைந்தது தான் சப்போட்டா பழம்.

குறிப்பாக சப்போட்டா பழத்தில் நமது உடலுக்கு தேவையான பலதரப்பட்ட சத்துக்கள் நிறைந்து காணப்படுகிறது. இந்த பழமானது நமது உடலில் எளிதாக செரிமானமாகும்.இது மட்டுமல்லாமல், சப்போட்டா பழத்தில் அதிக அளவு குளுக்கோஸ் இருப்பதால் நம் உடலுக்கு தேவையான இது ஆற்றலையும் வழங்குகிறது.

இந்த பழத்தில் உள்ள எதிர் ஆக்ஸிகரணிகள், நார்ச்சத்து மற்றும் இதர ஊட்டச்சத்துகள் புற்றுநோய்க்கு எதிரான பாதுகாப்பையும் தருகின்றது.

குறிப்பாக சப்போட்டா பழத்தை யாரெல்லாம் அடிக்கடி சாப்பிட்டு வருகிறார்களோ அவர்களுக்கு குடல் புற்று நோய் ஏற்படாது. இந்த பழத்தில் கால்சியம் மற்றும் பாஸ்பரஸ் சத்துக்கள் கணிசமாக இருப்பதால் உடலின் எலும்புகளை இது வலுப்படுத்தும்.

சப்போட்டா பழத்தில் வைட்டமின் ஏ சத்து அதிக அளவு உள்ளது. அதிக அளவு உள்ள இந்த வைட்டமின் ஏ-யினால் வயதான காலத்திலும் கூட கூர்மையான பார்வையை பெற உதவுகிறது. எனவே நல்ல பார்வை பெறுவதற்கு சப்போட்டா பழங்களை சாப்பிட வேண்டும்.

மேலும் அடிக்கடி சப்போட்டா பழத்தை சாப்பிட்டு வருவது ஆரம்பத்தில் கூறிய சிறுநீரகத்தில் உருவாகும் கற்களை நீக்கவும் உதவுகிறது. மேலும் சப்போட்டா பழத்தில் நார்ச்சத்து அதிக அளவில் உள்ளது. இதனால் உடலில் இருக்கும் மலச்சிக்கல் பிரச்சனையும் சரிசெய்யப்படுகிறது.

Previous articleகொய்யா இலையை இப்படி சாப்பிட்டால் கெட்ட கொழுப்பு காணாமல் போகும்
Next articleமுகம் பொலிவு பெற்று பளபளப்பாகவும் மினுமினுப்பாகவும் இருக்க 6 டிப்ஸ்