பருவநிலை மாற்றத்தால் பொதுவாக கூந்தலின் தன்மை பாதிப்படையும். போதுமான ஊட்டச்சத்து இல்லாததாலும், ஈரப்பதம் இல்லாமையும் தான் வலுவிழந்த, சிக்கலான கூந்தலுக்கு முக்கிய காரணமாகும். இது போன்ற தொடர் கூந்தல் பிரச்சனை காரணமாக மற்றும் முறையாக பராமரிக்க முடியாததால் பெரும்பாலான பெண்கள் முடியை வெட்டிக் கொள்கின்றனர்.
இது போன்ற கூந்தல் பிரச்சனைகளிலிருந்து தப்பிக்க வீட்டில் இருக்கும் எளிமையான பொருட்களை வைத்தே கூந்தலை அழகாகவும், மிருதுவாகவும் மாற்ற முடியும். இவற்றை முறையாக செய்து வந்தாலே அனைத்து வகையான கூந்தல் பிரச்சனைகளுக்கும் பை-பை சொல்லிவிடலாம்.
தேவையான பொருட்கள்:
*முட்டை (வெள்ளைக்கரு மட்டும்)
*தயிர்
கூந்தல் நீளத்திற்கு தகுந்தாற்போல் முட்டையும், தயிரும் எடுத்துக் கொள்ளவும்.
பயன்படுத்தும் முறை:
*ஒன்று அல்லது இரண்டு முட்டைக்கு 2 டேபிள் ஸ்பூன் தயிர் சரியாக இருக்கும். முட்டைக்கு ஏற்ற அளவு தயிரை எடுத்துக் கொள்ளவும்.
* முட்டையின் வெள்ளைக்கரு மற்றும் தயிர் இரண்டையும் ஒன்றாக சேர்த்து நன்கு கலந்துக் கொள்ளவும்.
* பின்னர், இந்த கலவையை முடியின் மீது மட்டும் தடவி நன்கு மசாஜ் செய்யவும்.
* 1 மணிநேரம் கழித்து சாதாரண நீரில் தலையை அலசவும்.
* மறுநாள் எப்போதும் போல் ஷாம்பூ போட்டு குளித்துக் கொள்ளவும்.
இது போன்று மாதம் இரண்டு முறை செய்தால் நல்ல பலன் கிடைக்கும்.