நீங்க தேய்க்கும் ஷாம்புவை இனி இப்படி தேயுங்க! 

Photo of author

By Kowsalya

நீங்க தேய்க்கும் ஷாம்புவை இனி இப்படி தேயுங்க!

வீட்டில் இருக்கக் கூடிய பொருட்களை வைத்து முடி நன்கு அடர்த்தியாக வளர இயற்கையான முறையை பார்ப்போம்.

தேவையான பொருட்கள்:

1. வாழைப்பழம் ஒன்று

2. நீங்கள் பயன்படுத்தக்கூடிய ஷாம்பூ 1

3. வெந்தயம் ஊறவைத்த தண்ணீர்

4. எலுமிச்சை பழ ஜூஸ் அரை டீஸ்பூன்

செய்முறை:

1. வாழைப்பழத்தை எடுத்து அதில் பாதி வாழைப்பழத்தை எடுத்து கொண்டு ஒரு பௌலில் போட்டு நன்றாக மசித்துக்கொள்ளவும்.

2. அதனுடன் வெந்தயம் ஊற வைத்த தண்ணீரை தேவையான அளவு சேர்த்துக் கொள்ளவும்.

3. நீங்கள் எந்த ஷாம்பு பயன்படுத்துகிறீர்களோ அந்த ஷாம்பை 2 பாக்கெட் அளவு அதில் ஊற்றிக் கொள்ளவும்.

4. பின் அதில் அரை டீ ஸ்பூன் அளவுக்கு எலுமிச்சை பழ ஜூஸை கலந்து கொள்ளவும்.

5. அனைத்தும் நன்றாக கலந்து வரும்படி நன்றாக கலக்கி கொள்ளவும்.

இதை உங்கள் மயிர் கால்களில் படும்படி நன்றாக தலையில் தேய்த்து விடவும்.

இதை 20 நிமிடங்கள் ஊற வைத்து பின் சுத்தமான தண்ணீர் கொண்டு அலசி விடலாம்.

இப்படி நீங்கள் வாரம் இரண்டு முறை செய்து வரும்போது உங்களது முடி காடு போல வளர்வதை கண்கூடாக காணலாம்.