பணக் கஷ்டம் நீங்க அமாவாசை அன்று செய்ய வேண்டிய பரிகாரம்..!! இவ்வாறு செய்தால் அடுத்த அமாவாசைக்குள் நீங்கள் நினைத்தவை நிறைவேறும்..!!

Photo of author

By Divya

பணக் கஷ்டம் நீங்க அமாவாசை அன்று செய்ய வேண்டிய பரிகாரம்..!! இவ்வாறு செய்தால் அடுத்த அமாவாசைக்குள் நீங்கள் நினைத்தவை நிறைவேறும்..!!

இந்த பரிகாரத்தை அமாவாசையான இன்று மதியம் 12:12 மணிக்கு செய்ய வேண்டும். இந்த பரிகாரம் செய்ய தேவையான பொருட்கள் 3 இலவங்கம், 3 ஏலக்காய், 1 அன்னாசி மொக்கு மற்றும் கண்ணாடி கிண்ணம் ஆகும்.

இந்த பரிகாரம் செய்யும் பொழுது குலதெய்வத்தை மனதார நினைத்துக் கொண்டு செய்ய வேண்டும். இவ்வாறு செய்தால் கடன் தீர்ந்து பண வரவு அதிகரிக்கும்.

பரிகாரம்:-

ஒரு கண்ணாடி கிண்ணத்தில் 3 இலவங்கம், 3 ஏலக்காய் மற்றும் 1 அன்னாசி மொக்கு சேர்த்து கொள்ளவும். இதை இரவு அல்லது மதியம் 12:12 மணிக்கு உங்கள் பீரோவில் வைத்து விடவும்.

இந்த பரிகாராத்தை செய்து முடித்த உடன் ஒரு வெள்ளை தாளில் நீங்கள் என்ன நினைக்கிறீர்களோ அதை பச்சை மை உடைய பேனாவினால் 12 முறை எழுதவும்.

உதாரணத்திற்கு கடன் தீர வேண்டும். திருமணம் நடக்க வேண்டும். பணம் பெருக வேண்டும். இது போன்று அந்த வெள்ளைத் தாளில் மனதார நினைத்துக் கொண்டு 12 முறை எழுதவும். பின்னர் இந்த வெள்ளைத் தாளை மடித்து பூஜை அறையில் வைத்து விடவும். இவ்வாறு செய்த அடுத்த அமாவாசைக்குள் நீங்கள் நினைத்த காரியங்கள் நிறைவேறும். பின்னர் இந்த வெள்ளைத் தாளை நெருப்பில் கொளுத்தி சாம்பலாக்கி கால் படாத இடத்தில் கொட்டி விடவும்.