மீண்டும் ரீமிக்ஸ் பாடல் கலாச்சாரம் : ரசிகர்கள் கொண்டாட்டம்!!
தமிழ் சினிமாவில் தற்போது ரீமிக்ஸ் பாடல் கலாச்சாரம் பெருகி உள்ளது. தற்போது வெளியாகும் படங்கள் அனைத்திலும், ரீமிக்ஸ் பாடல்கள் இடம்பெற்று வருகின்றன.
ரீமிக்ஸ் பாடல்கள் என்றால்?:-
ரீமிக்ஸ் பாடல் என்றால், பழைய படங்களில் இடம்பெற்ற பழைய பாடல்கள், தற்போது உள்ள நவீன டிஜிட்டல் வடிவில் இசையை மீட்டு உருவாக்கம் செய்து பாடலை வெளியிடுவது. பாடல் வரிகளும், பாடகர்களின் குரல் கூட அப்படியே இருக்கும் ஆனால், இசை மட்டும் தற்போது உள்ள 2k கிட்ஸ்-களுக்கு பிடித்த மாதிரி துள்ளலான இசையில் இருக்கும்.
80-களில்; 90-களில் :-
தமிழ் சினிமாவில் 80களில்; 90-களில் வெளியான பாடல்கள் அனைத்தும் சூப்பர் ஹிட் ஆனது. அந்த காலகட்டத்தில் படத்தில் இடம்பெற்ற ஐந்து பாடல்களோ? ஆறு பாடல்களோ? அனைத்தும் ஹிட் அடித்தது. அதில் சில பாடல்கள் இன்னும் மக்கள் ரசித்துக் கொண்டு வருகின்றனர். அந்த பாடல் தற்போது, தமிழ் சினிமாவில் மீண்டும் கேட்க முடிகிறது.
தற்போது வெளியான மார்க் ஆண்டனி படத்தில் கூட நடிகர் நெப்போலியன் அவர்களின் நடித்த ‘எட்டுப்பட்டி ராசா’ என்னும் படத்தில் இடம் பெற்ற “பஞ்சு மிட்டாய், சேலக் கட்டி” பாடல் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்றது. அதனை தொடர்ந்து அதே படத்தில் “நீங்கள் கேட்டவை” படத்தில் இடம்பெற்ற “அடியே மனம் நில்லுனா நிக்காதடி” பாடலையும் ரசிகர்கள் கொண்டாடினர். மேலும், நடிகர் கமல்ஹாசன் அவர்களின் நடிப்பில், இயக்குநர் லோகேஷ் கனகராஜ் அவர்களின் இயக்கத்தில் உருவான படம் விக்ரம். இப்படத்தில் இடம்பெற்ற “சிக்குப்புக்கு வத்திக்குச்சி சக்குனதா பத்திக்கிச்சு” பாடலும் ரீமிக்ஸ் செய்யப்பட்டது.
தற்போது உள்ள இயக்குநர்கள் தனக்கு பிடித்த பாடல்களை, தங்கள் படத்தில் இடம்பெற செய்து வருகின்றனர். இந்த பழக்கம் தற்போது பெரிய வருகிறது. சின்ன இயக்குனர்கள் முதல் பெரிய முன்னணி இயக்குனர்கள் என அனைவரும் இந்த பாணியை பின்பற்றி வருகின்றனர். அதே சமயம், ரீமிக்ஸ் செய்யப்பட்ட பாடல்கள் ரசிகர்களுக்கு நல்ல வரவேற்பு தந்தாலும், இதற்கு உரிய அங்கீகாரம் பெற்ற பிறகு பாடல்களை ரீமிக்ஸ் செய்ய வேண்டும் என்ற கோரிக்கையும் தமிழ் சினிமா வட்டாரங்களில் எழுந்துள்ளது குறிப்பிடத்தக்கது.