ஆந்திர சட்டசபைக்குள் மீண்டும் அலப்பறை செய்யும் தெலுங்கு தேசம் கட்சியினர் !!! விசில் அடித்து அமளியில் ஈடுபட்ட எம்எல்ஏ நந்தமூரி பாலகிருஷ்ணா!!! 

0
129
#image_title
ஆந்திர சட்டசபைக்குள் மீண்டும் அலப்பறை செய்யும் தெலுங்கு தேசம் கட்சியினர் !!! விசில் அடித்து அமளியில் ஈடுபட்ட எம்எல்ஏ நந்தமூரி பாலகிருஷ்ணா!!!
ஆந்திர மாநிலத்தின் முன்னாள் முதல்வரும் தெலுங்கு தேசம் கட்சியின் தலைவருமான சந்திரபாபு நாயுடு அவர்கள் கைது செய்யப்பட்டதை கண்டித்து தெலுங்கு தேச கட்சியின் எம்எல்ஏவும் நடிகருமான நத்தமூரி பாலகிருஷ்ணா அவர்கள் சட்டசபையில் விசில் ஊதி கண்டனம் தெரிவித்து அமளியில் ஈடுபட்டார்.
ஆந்திர மாநிலத்தின் முன்னாள் முதல்வரும் தெலுங்கு தேச கட்சியின் தலைவருமான சந்திரபாபு நாயுடு அவர்கள் திறன் மேம்பாட்டு ஊழல் வழக்கில் கைது செய்யப்பட்டு இராஜமுந்திரி சிறையில் உள்ளார். சந்திரபாபு நாயுடு அவர்களின் கைதை எதிர்த்து தெலுங்கு தேசம் கட்சியினரும், ஜனசேனா கட்சியினரும் போராட்டத்தில் ஈடுபட்டு வரும் நிலையில் ஆந்திர சட்டசபைக்குள் இதே காட்சிகள் அரங்கேறி வருகின்றது.
அதாவது நேற்று(செப்டம்பர்21) ஆந்திர சட்டசபை கூடியது. அப்பொழுது ஆந்திர சட்டசபையில் தெலுங்கு தேசம் கட்சியை சேர்ந்த எம்எல்ஏக்கள் சபநாயக்கர் மீது பேப்பர்களையும், தண்ணீர் பாட்டில்களையும் தூக்கி வீசி சந்திரபாபு நாயுடு அவர்கள் கைது செய்யப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.
மேலும் நடிகரும் இந்துபுரம் தொகுதியின் தெலுங்கு தேசம் கட்சியின் எம்எல்ஏவும் ஆன நடிகர் நந்தமூரி பாலகிருஷ்ணா அவர்கள் தொடையை தட்டி மீசையை முறுக்கி ஆவேசமாக பேசினார். இதற்கு நடிகை ரோஜா அவர்கள் கண்டனம் தெரிவித்திருந்தார்.
அப்பொழுது “ஆதாரம் எதுவும் இல்லாமல் சந்திரபாபு நாயுடு அவர்களை கைது செய்து உள்ளீர்கள். முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டி அவர்கள் சட்டசபைக்கு வர வேண்டும். வந்து இதற்கு பதில் அளிக்க வேண்டும்” என்று நந்தமூரி பாலகிருஷ்ணா அவர்கள் ஆவேசமாக பேசினார். இந்நிலையில் இன்று(செப்டம்பர்22) நடைபெற்ற கூட்டத் தொடரிலும் எம்எல்ஏ நந்தமூரி பாலகிருஷ்ணா அவர்கள் அமளியில் ஈடுபட்டுள்ளனர்.
இன்று(செப்டம்பர்22) தொடங்கிய சட்டசபையிலும் நடிகரும் எம்எல்ஏவுமான நந்தமூரி பாலகிருஷ்ணா அவர்கள் விசில் ஊதி அமளியில் ஈடுபட்டார். இதனால் சட்டசபைக்குள் பரபரப்பு ஏற்பட்டது. மேலும் தெலுங்கு தேசம் கட்சியின் எம்எல்ஏக்களும் அவருடன் சேர்ந்து அமளியில் ஈடுபட்டனர். அக்கட்சியின் எம்எல்ஏக்கள் கே.அச்சன் நாயுடு, பி.அசோக் ஆகியோர் கூட்டத் தொடரில் இருந்து சஸ்பெண்ட் செய்யப்பட்டனர்.