சென்னை பட்டினப்பாக்கம் லூப் சாலையில் ஆக்கிரமைப்புகள் அகற்றம்! மீனவர்கள் போராட்டம்

0
257
#image_title

சென்னை பட்டினப்பாக்கம் லூப் சாலையில் ஆக்கிரமைப்புகள் அகற்றம்! மீனவர்கள் போராட்டம்

சென்னை மெரினா கடற்கரையில் கலங்கரை விளக்கம் முதல் பட்டினப்பாக்கம் வரையிலான லூப் சாலையில் ஏராளமான மீன் கடைகள் , மீனவர்கள் சார்பில் உணவகங்கள் நடத்தப்பட்டு வருகின்றன.

சாலையில் நடைபாதையை ஆக்கிரமிப்பு செய்து மீனவர்கள் மற்றும் மீனவ சமுதாய சுய உதவி குழுக்கள் கடைகளை நடத்தி வருவதால் போக்குவரத்து இடையூறு ஏற்படுவதாகவும் , மேலும் உணவகங்களுக்கு வரும் பொது மக்கள் வாகனங்களும் சாலையிலேயே நிறுத்தபடுவதால் அலுவல் நேரங்களில் போக்குவரத்து நெரிசல் ஏற்படுவதாக கூறபடுகிறது.

இது தொடர்பாக சென்னை உயர்நீதிமன்றம் பல்வேறு கேள்விகளை எழுப்பிய நிலையில் சென்னை மாநகராட்சியின் சார்பில் கடைகளை அப்புறப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டது இதற்கு எதிர்ப்பு தெரிவித்து நொச்சிக்குப்பம், நொச்சிநகர், டுமிங்குப்பம், பவானிகுப்பம்,முள்ளிக்குப்பம் பட்டினப்பாக்கம் , சீனிவாசபுரம் ஆகிய மீனவமக்கள் தொடர்ந்து பல்வேறு போராட்டங்களில் ஈடுபட்டனர்.

இந்நிலையில் லூப் சாலையில் இருந்த சாலையோர மீன் கடைகள் அனைத்தும் ஒழுங்குபடுத்தபட்டு நடைபாதை விரிவாக்க பணிகளை மேற்கொள்ள சென்னை மாநகராட்சி நடவடிக்கை எடுத்துள்ளது.

லூசாலையில் மட்டும் 350 க்கும் மேற்பட்ட மீன் கடைகள் மற்றும் மீன் உணவகங்கள் செயல்படும் நிலையில் உரிய அனுமதியின்றி செயல்படும் உணவகங்கள் மீது சென்னை மாநகராட்சியின் சார்பில் தற்போது நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

லூப் சாலையில் இருபுறங்களிலும் மேற்கொள்ளப்பட்டுள்ள ஆக்கிரமிப்புகள் காவல்துறை உதவியுடன் மாநகராட்சி அதிகாரிகள் அகற்றி வருகின்றனர். இதற்கு மீனவ சமுதாய மக்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.

Previous articleஇஸ்லாமியர்களின் 4% இடஒதுக்கீட்டை ரத்து செய்யும் தீர்மானம் – நிறுத்தி வைக்க உச்சநீதிமன்றம் உத்தரவு
Next article700 ஆண்டுகள் பழமை வாய்ந்த சோழர் காலத்தில் கட்டப்பட்ட சுப்ரமணிய சுவாமி கோவில் குடமுழுக்கு!