அதிமுக கட்சியில் இருந்து ஓ.பி.எஸ் நீக்கமா? இனி இடைக்கால பொது செயலாளர் ஈ.பி.எஸ்!
சென்னையில் நடந்த முடிந்த மாவட்ட செயலாளர்கள் மற்றும் மாநில நிர்வாகிகள் கூட்டத்தில் ஒற்றை தலைமை ஏற்க வேண்டும் என்ற வேண்டுகோள் வந்தது. இந்த கோரிக்கை வந்த நாளிலிருந்து இபிஎஸ் ஓபிஎஸ் கிடையே பெரிய போர் ஒன்று நடந்து வருகிறது. ஒற்றை தலைமையை யார் ஏற்க போகிறார்கள் என்ற போட்டி இருவரிடமும் உள்ளது.
பெரும் வாரியாக மாவட்ட செயலாளர்கள் அனைவரும் இபிஎஸ் பக்கமே ஆதரவு தெரிவித்து வருகின்றனர். ஓபிஎஸ் பக்கம் ஆதரவாளர்கள் குறைவாகவே உள்ளனர்.இன்று அதிமுக நிர்வாகிகள் கூட்டம் நடைபெறுகிறது. இந்த கூட்டத்தில் அதிமுக வின் இடைக்கால பொது செயலாளராக இபிஎஸ் நியமிக்கப்பட உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
அதேபோல பொருளாளராக இருந்த ஓ பன்னீர் செல்வத்தை நீக்கிவிட்டு அதிமுகவின் புதிய பொருளாளராக கேபி முனுசாமி நியமிப்பதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளது. இதிலிருந்து பார்க்கும் பொழுது ஓ பன்னீர்செல்வம் கட்சியை விட்டு நீக்கப்படுவது அப்பட்டமாக தெரிகிறது.