அகற்றுக அகற்றுக டாஸ்மாக் கடைகளை அகற்றுக! இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் ஆர்ப்பாட்டம்!

Photo of author

By Rupa

அகற்றுக அகற்றுக டாஸ்மாக் கடைகளை அகற்றுக! இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் ஆர்ப்பாட்டம்!

Rupa

Remove Remove Remove Tasmac Shops! Demonstration on behalf of the Communist Party of India!
அகற்றுக அகற்றுக டாஸ்மாக் கடைகளை அகற்றுக! இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் ஆர்ப்பாட்டம்!
தேனி மாவட்டம்,சின்னமனூர் நகரில் எள்ளுக்கட்டை சாலையில் அமைந்துள்ள டாஸ்மார்க் கடையினை  அகற்றிடவும், சின்னமனூர் அரசு மருத்துவமனையை தரம் உயர்த்தி, தலைக்காய அறுவைச் சிகிச்சைப் பிரிவினை தொடங்கிடவும், தேரடிப் பேருந்து நிறுத்தத்தை நீக்கும் முடிவை கைவிடவும் வலியுறுத்தி, இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் ஒன்றியக்குழு சார்பில், ஒன்றியச் செயலாளர் இரா.கதிரப்பன் தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
ஒன்றிய துணைச் செயலாளர் வெ.ஜீவபாரதி  முன்னிலை வகித்தார். மாநிலக்குழு உறுப்பினர் எஸ்.திருமலைக்கொழுந்து  ஆர்ப்பாட்டத்தை துவக்கி வைத்து சிறப்புரையாற்றினார். மாநிலக்குழு உறுப்பினர் வே.பெத்தாட்சி ஆசாத்  நிறைவுரையாற்றினார. மாவட்டக்குழு உறுப்பினர்கள் ப.செல்லன், இரா.தமிழ்பெருமாள், மு.காசிராஜா கண்டன உரை ஆற்றினார்கள். ஒன்றியப் பொருளாளர் பி.எஸ்.குருசாமி,  ஜெய்ஹிந்த், S.கார்த்திக், A.முருகன், N.பாலமுருகன், G.சஞ்சய், M.விக்னேஷ், S.சந்துரு. M.வேல், தீன் முகமது, K.சுருளி, N.பவுன்ராஜா, K.தங்கராஜ் உள்ளிட்டோர் இந்த  ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டனர்..