வெஸ்ட் இண்டீஸ் தொடருக்கான இந்திய அணியில் மாற்று வீரர்கள்!! பிசிசிஐ அறிவிப்பு!!

0
158
Replacement players in Indian team for West Indies series!! BCCI Announcement!!
Replacement players in Indian team for West Indies series!! BCCI Announcement!!

வெஸ்ட் இண்டீஸ் தொடருக்கான இந்திய அணியில் மாற்று வீரர்கள்!! பிசிசிஐ அறிவிப்பு!!

வெஸ்ட் இண்டீஸ்க்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ளவிருக்கும் இந்திய அணி இரண்டு டெஸ்ட் போட்டிகள், 3 ஒருநாள் போட்டிகள் மற்றும் 5 T20 போட்டிகளில் களமிறங்க உள்ளது.

அந்த வகையில் தற்போது டெஸ்ட் போட்டி மற்றும் ஒருநாள் போட்டிக்கான இந்திய அணியை பிசிசிஐ அறிவித்துள்ளது. இரண்டு அணிகளுக்கு ரோகித் ஷர்மா கேப்டனாகவும், ஒருநாள் தொடருக்கு ஹர்த்திக் பாண்டியா மற்றும் டெஸ்ட் தொடருக்கு ரகானேவும் துணை கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளனர்.

டெஸ்ட் அணியில் புஜாரா நீக்கப்பட்டு, அதற்கு பதிலாக ருதுராஜ் கெய்க்வாட், ஜெய்ஸ்வால் மற்றும் முகேஷ் குமார் ஆகியோரை நியமித்துள்ளனர். ஒருநாள் போட்டியில் சஞ்சு சாம்சன் மீண்டும் அணியில் இடம் பிடித்துள்ளார்.

ஒருநாள் போட்டியில் பங்குபெறும் வீரர்களான, ரோகித் ஷர்மா (கேப்டன்), ருதுராஜ் கெய்க்வாட், விராட் கோலி, சூர்யகுமார் யாதவ், சஞ்சு சாம்சன், இஷான் கிஷன், ஹர்த்திக் பாண்டியா, ஷர்தூல் தாக்கூர், ஜடேஜா, அக்க்ஷர் படேல், யுஸ்வேந்திர சாஹல், குல்தீப் யாதவ், ஜெய்தேவ் உனட்கட், முகமது சிராஜ், உம்ரான் மாலிக், முகேஷ் குமார் ஆகியோர் உள்ளனர்.

டெஸ்ட் போட்டியில் பங்குபெறுபவர்களான ரோகித் ஷர்மா (கேப்டன்), சுப்மன் கில், ருதுராஜ் கெய்க்வாட், விராட் கோலி, யஜஸ்வி ஜெய்ஸ்வால், அஜிங்க்யா ரகானே, கேஎஸ் பரத், இஷான் கிஷான், அஷ்வின், ஜடேஜா, ஷர்துல் தாக்கூர், அக்சர் படேல், முகமது சிராஜ், முகேஷ் குமார், ஜெய்தேவ் உனட்கட், நவ்தீப் சைனி ஆகியோர் இடம் பெற்றுள்ளனர்.

author avatar
CineDesk