ஓபிஎஸ்+ரஜினி.. பாஜக-வின் மாஸ்டர் பிளான்!! செல்லா காசா போகும் எடப்பாடி!!

0
298
Reports have surfaced that the BJP is thinking that the AIADMK will support the OPS
Reports have surfaced that the BJP is thinking that the AIADMK will support the OPS

BJP ADMK: அதிமுக இரட்டை இலை ஓபிஎஸ்-க்கு ஆதரவாக அமையும் என பாஜக எண்ணுவதாக தகவல்கள் வெளிவந்துள்ளது.

கடந்த சட்டமன்ற தேர்தலிலிருந்து அதிமுக-வில் பிளவு ஏற்பட்டு சின்னம் உடையும் நிலைக்கு வந்தது. ஆனால் பொதுக்குழு கூட்டம் வைக்கப்பட்டு பன்னீர் செல்வம் உள்ளிட்டோர் அடிப்படை பதவியிலிருந்து நீக்கம் செய்ததோடு, எடப்பாடி பழனிசாமியை ஒருமித்தமாக பொதுக்குழு உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டனர்.

இதனிடையே இது செல்லாது என உயர்நீதிமன்றம் எனத் தொடங்கி உச்சநீதிமன்றம் வரை வழக்கு தொடத்து தற்பொழுது நிலுவையில் உள்ளது. இதனிடையே தேர்தல் வந்த காரணத்தினால் இரட்டை இலை சின்னத்தை தேர்தல் ஆணையம் எடப்பாடி பழனிசாமிக்கே ஒதுக்கினர்.

இச்சமயத்தில் கட்சியிலிருந்து விலகிய புகழேந்தி என்பவர் இரட்டை இலை சின்னத்தை எடப்படிக்கு எப்படி ஒதுக்க முடியும், கட்சி சார்ந்த வழக்குகள் தற்பொழுது வரை நிலுவையில் உள்ளதே என கூறி தேர்தல் ஆணையத்தின் மீதே வழக்கு தொடுத்துள்ளார்.

இந்த வழக்கு குறித்து விசாரணை செய்த பொழுது தேர்தல் ஆணையம் இரு தரப்பு வாதத்தையும் கேட்டு பதிலளிக்குமாறு நீதிமன்றம் உத்தரவிட்டது. ஆனால் இரட்டை இலை சின்னம் ஒதுக்குவது தவிர்த்து வேறு எந்த முடிவுகளிலும் தேர்தல் ஆணையம் தலையிட முடியாது என கூறி கடிதம் ஒன்றையும் அனுப்பினார். ஓபிஎஸ் தனது தரப்பு வாதத்தை, அதாவது அதிமுக சட்ட வரைமுறைப்படி இரட்டை இலை எனக்கு தான் சொந்தம் எனக் கூறியுள்ளார்.

இவ்வாறு இருவரும் மாறி மாறி தனது தரப்பை கூறியுள்ளனர். இதானால் மீண்டும் உட்கட்சி பூசல் சம்மந்தமான வழக்குகள் அனைத்தும் நீதிமன்றத்தையே நாட வேண்டியிருக்கும். முன்னதாகவே உயர்நீதிமன்றம் எடப்பாடி-க்கு சாதகமாக தீர்ப்பு சொன்ன நிலையில் மீண்டும் உச்ச நீதிமன்றத்திலும் அதுவே நடக்கலாம் என கூறுகின்றனர். இருப்பினும் ஓபிஎஸ் ரஜினியை திடீரென்று சந்தித்துள்ளார். இது ஓர் அரசியல் நகர்வாக பாரக்கப்படுகிறது.

பாஜக-வுடன் அதிமுக கூட்டணி வைக்க மாட்டேன் எனக் கூறினாலும் ஓபிஎஸ் இணைப்பில் தான் உள்ளார். இவரை வைத்து அதிமுக-வை தன்வசம் கொண்டு வர முடியுமா என்ற கணக்கை பாஜக போடுவதாக கூறுகின்றனர். இதுகுறித்து விசாரிக்க தான் இவர்களுடனான சந்திப்பு நடந்ததாக அரசியல் விமர்சகர்கள் கூறுகின்றனர்.

Previous articleகெமிக்கல் சோப் வேண்டாம்.. சருமத்தை மிருதுவாக்க நலுங்கு மாவு பயன்படுத்துங்கள்!!
Next articleமருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட கங்கை அமரன்!! ஷூட்டிங் ஸ்பாட்டில் நடந்தது என்ன!!