ஆளும் கட்சியில் இவர்களுக்கெல்லாம் கட்டாயம் பதவி இல்லை.. தேர்வே இல்லாமல் அப்பாயின்மென்ட் ஆன வாரிசு!!
இந்த அரசியல் சூழலில் மட்டும் தான் ஒருவர் ஒரே நாளில் தலைவராகுவதும் அதுவே கட்சியை விட்டு முழுமையாக நீக்குவதும் என பல மாற்றங்கள் நிகழும். அந்த வகையில் திமுக ஆட்சி அமைப்பதற்கு முன்பு வாரிசு அரசியல் செய்யமாட்டோம் என்றும் எனது மகன் கட்சிக்கு வர மாட்டார் என்றும் உறுதி கொடுத்தார். ஆனால் சட்டமன்ற தேர்தலில் ஸ்டாலின், அவரது மகனை உள்நுழைத்து தற்பொழுது அமைச்சர் பதவி வரை கொடுத்து அமர்த்தியுள்ளார்.
அதே போல தான் இதர கட்சிகளிலும் யாருடன் யார் கூட்டணி, கட்சியின் தலைவர் யார் என்பதில் பல சிக்கல் நிலவி வருகிறது. திமுகவிற்குசட்டமன்றத் தேர்தலில் இருந்த மவுஸ் ஆனது தற்பொழுது இந்த நாடாளுமன்ற தேர்தலில் இல்லை என்பது அப்பட்டமாகவே தெரிகிறது. அதன் முதற்கட்ட வெளிப்பாடாக தான் அரசு ஊழியர்களின் வாக்குப்பதிவு உள்ளது.
அரசு ஊழியர்களின் வாக்கானது 70% ஆளும் கட்சிக்கு சாதகமாக இல்லை என்ற தகவல் வெளிவந்து ஆளும் கட்சிக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதனைத் தொடர்ந்து மக்களிடம் எப்படியாவது வாக்குகளை பெற்று விட வேண்டும் என்பதற்காக மாவட்ட செயலாளர்கள் முதல் நிர்வாகிகள் வரை அனைவருக்கும் கடுமையான நிபந்தனைகளை ஸ்டாலின் அமல்படுத்தினார்.
எந்தெந்த தொகுதிகளில் திமுக வெற்றி காணவில்லையோ கட்டாயம் அந்த தொகுதியில் உள்ள தலைவர் பதவி மாற்றம் செய்யப்படுவார் என்றும் அதுவே வெற்றி பெற்றால் உயர் பதவி கிடைக்கும் என்றும் கூறியுள்ளார். இது அனைத்தும் முடிவுகள் வந்தால் மட்டும் தான் எந்தெந்த தலைவர்கள் மாறப் போகிறார்கள் என்பது தெரியும், ஆனால் முடிவே தெரியாமல் ஒருவர் துணை முதல்வர் பதவிக்கு தற்பொழுதே அப்பாயின்மென்ட் செய்து வைத்துள்ளனர்.
கட்சியில் நுழையும் போது இளைஞர்கள் அணி தலைவராக இருந்து தற்போது விளையாட்டுத் துறை அமைச்சராக இருக்கும் உதயநிதி ஸ்டாலினை தான் அடுத்த துணை முதல்வர் பதவிக்கு நகர்த்தியுள்ளதாக கூறுகின்றனர். இதுகுறித்து உதயநிதியிடம் சமீபத்தில் பத்திரிக்கையாளர் கேள்வி எழுப்பிய பொழுது, அனைத்தையும் எனது அப்பா தான் முடிவு எடுக்க வேண்டும் என்பது போல் பதில் அளித்தார்.
இந்த ஒற்றை வார்த்தையே போதும் அடுத்த துணை முதல்வர் நான்தான் என்பது சொல்லாமல் சொன்னது போல் இருந்தது.ஆளும் கட்சி இந்த நாடாளுமன்ற தேர்தல் முடிவுக்காக காத்திருப்பதாகவும் முடிவுகள் வெளிவந்ததும் துணை முதல்வர் பதவிக்கு கட்டாயம் உதயநிதி அமர்த்தப்படுவார் என்று அரசியல் சுற்று வட்டாரங்கள் கூறுகின்றது.