கைவிரித்த ராணுவ மருத்துவமனை! குடியரசு தலைவர் வேறொரு மருத்துவமனைக்கு மாற்றம்!

Photo of author

By Rupa

கைவிரித்த ராணுவ மருத்துவமனை! குடியரசு தலைவர் வேறொரு மருத்துவமனைக்கு மாற்றம்!

குடியரசுத்தலைவர் ராம்நாத் கோவிந்திற்கு நேற்று காலை மாரடைப்பு ஏற்பட்டது.இந்நிலையில் அவர் ராணுவ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.அதைத் தொடர்ந்து அவருக்கு தீவிர சிகிச்சைக் கொடுக்கப்பட்டு வந்தது.மேற்கொண்டு பரிசோதனை செய்த மருத்துவர்கள் அவர் நலமுடன் இருப்பதாகவும்,வழக்கமான பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு இருப்பதாகவும் தெரிவித்தனர்.

அதன்பின் ஜனாதிபதி உடல்நிலையை பிரதமர் மோடி அவரது மகனிடம் விசாரித்தார்.பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் நேரில் சென்று அவரது உடல்நிலையை விசாரித்தார்.அதன்பின் மீண்டும் ராணுவ மருத்துமனை சில தகவலை வெளியிட்டது.அதில் அவர்கள் கூறியது,ஜனாதிபதியின் உடல்நிலை மிகவும் நலமாக இருப்பதாகவும் மேலும் சில பரிசோதனைகளை மேற்கொள்ள வேண்டி இருப்பதால் எய்ம்ஸ் மருத்துவமனைக்கு மாற்றுவதாக கூறியுள்ளனர்.

75 வயதான் ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் தற்போது ராணுவ மருத்துவமனையிலிருந்து எய்ம்ஸ் மருத்துவமனைக்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளனர்.அதுமட்டுமின்றி அனத்து சோதனைகளும் ராணுவ மருத்துவமனையில் எடுக்கும் நிலையில் ஏன் இந்த மருத்துவர்கள் எய்ம்ஸ் மருத்துவமனையை பரிந்துரை செய்துள்ளனர் என பலர் மனதில் கேள்விகள் எழுந்துள்ளது.அதுமட்டுமின்றி அவர் நலமுடன் இருப்பதாக கூறுகின்றனர் ஆனால் எதற்காக வேறொரு மருத்துவமனைக்கு செல்கின்றனர் எனவும் பலர் யோசித்து வருகின்றனர்.அதுமட்டுமின்றி பலர் அவர் மிகவும் மோசமான நிலையில் இருப்பதால் தான் எய்ம்ஸ் மருத்துவமனைக்கு மாற்றுவதாக பேசி வருகின்றனர்.