இந்த முறையும் ஆன்லைனில் தான் தேர்வு! அண்ணா பல்கலைக்கழகம் வெளியிட்ட அறிவிப்பால் இன்ப அதிர்ச்சியடைந்த  மாணவர்கள்!

0
78
Good news for engineering students published by Anna University! Students in a flood of joy!
Good news for engineering students published by Anna University! Students in a flood of joy!

இந்த முறையும் ஆன்லைனில் தான் தேர்வு! அண்ணா பல்கலைக்கழகம் வெளியிட்ட அறிவிப்பால் இன்ப அதிர்ச்சியடைந்த  மாணவர்கள்!

கொரோனா தொற்றானது ஓராண்டு காலம் மக்களை ஆட்டிபடைத்து விட்டது.தொற்று காரணமாக அப்போது கல்லூரி மற்றும் பள்ளிகளுக்கு கால வரையற்ற விடுறை அளிக்கப்பட்டு மேலும் அவர்களுக்கு வகுப்புகள் ஆன்லைன் மூலமாக நடத்தப்பட்டது.அதற்கடுத்து தேர்வுகளும் ஆன்லைனிலேயே வைக்கப்பட்டது.கொரோனா தொற்று குறைந்த நிலையில் மீண்டும் பள்ளி,கல்லூரிகளை திறந்தனர்.

அப்போது மீண்டும் கொரோனா 2 வது ,3 வது அலையாக மின்னல் வேகத்தில் பரவி வந்தது.மாணவர்கள் அதிகபடியானோர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டனர்.அந்த நிலையில் தமிழக அரசாங்கம் மீண்டும் கால வரையற்ற விடுமுறை அளித்தது.சென்ற வருடம் நடந்ததை போலவே இந்த வருடமும் ஏப்ரல் மாதம் 15 ஆம் தேதி முதல் 22ஆம் தேதி வரை செமஸ்டர் தேர்வு நடைபெறும் என அண்ணா பல்கலைக்கழகம் அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

மேலும் இந்த தேர்வுகள் அனைத்தும் ஆன்லைன் மூலமாகவே நடத்தப்படும் என கூறியுள்ளனர்.மேலும் செய்முறை தேர்வுகளை நேரடி முறையில் வரும் 31 ஆம் தேதிக்குள் நடத்தி முடிக்க வேண்டும் எனவும் அதற்கடுத்து viva-voce போன்றவற்றை ஆன்லைனில் நடத்திக் கொள்ள வேண்டும் எனவும் ஆணை வெளியிட்டுள்ளது.நேரடியாக அழைத்து தேர்வு நடத்த முடியாவிட்டால் முன் அனுமதி பெற்று பின்னர் நடத்தலாம் என தெரிவித்துள்ளனர்.

போன முறை ஆன்லைன் தேர்வு எழுதிய 100 க்கு 90%  மாணவர்கள் தேர்ச்சி பெற்றாதால்,மாணவர்கள் மிகுந்த மகிழ்ச்சியடைந்தனர்.இம்முறையும் ஆன்லைன் மூலம் தேர்வுகள் நடத்தப்படுவதால் சென்ற ஆண்டை போலவே  இந்த முறையும் தேர்ச்சி பெற்றுவிடுவோம் என்ற சந்தோஷத்தில் மாணவர்கள் உள்ளனர்.