இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகள் விளையாடிய டி20 உலகக் கேப்பை லீக் போட்டியின் நடுவே பாகிஸ்தான் நாட்டின் முன்னாள் அதிபர் இம்ரான் கான் அவர்களை விடுதலை செய்ய வேண்டும் என்ற வாசகத்துடன் விமானம் வானத்தில் பறந்தது. இது தொடர்பான வீடியோ இணையத்தில் வைரலாகி வருகின்றது.
இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகள் நடப்பு உலகக் கோப்பை தொடரில் லீக் சுற்றில் நேற்று(ஜூன்9) விளையாடியது. இதில் முதலில் பேட் செய்த இந்தியா 119 ரன்கள் எடுத்தது. இதையடுத்து விளையாடிய பாகிஸ்தான் அணி 20 ஓவர்களின் முடிவில் 113 ரன்கள் மட்டுமே எடுத்து 6 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியை தழுவியது. இந்நிலையில் போட்டியின் நடுவே பாகிஸ்தான் முன்னாள் அதிபர் இம்ரான் கான் அவர்களை விடுதலை செய்ய வேண்டும் என்ற வாசகத்துடன் விமானம் ஒன்று வானத்தில் பறந்தது. இது தெடர்பான வீடியோ இணையத்தில் வைரலாகி வருகின்றது.
ஏற்கனவே பாகிஸ்தான் மற்றும் இந்தியா அணிகள் விளையாடும் போட்டிக்கு ஐஎஸ்ஐஎஸ் தீவிரவாத அமைப்பிடம் இருந்து அச்சுறுத்தல் வந்திருந்தது. அதாவது போட்டி நடைபெறும் இடத்தில் குண்டு வெடிக்கும் சம்பவம் நடக்கும் என்று ஐஎஸ்ஐஎஸ் அமைப்பு கூறியிருந்தது.
இதனால் இந்தியா பாகிஸ்தான் அணிகள் விளையாடிய இந்த போட்டிக்கு அமெரிக்க காவல் துறையினர் பலத்த பாதுகாப்பு அளித்திருந்தனர். இந்நிலையில் போட்டி நடைபெற்றுக் கொண்டிருக்கும் பொழுது வானத்தில் குட்டி விமானம் ஒன்று பறந்து சென்றது.
அந்த விமானத்தில் Release Imran Khan என்ற வாசகத்துடன் அடங்கிய ஒரு துணியும் பின்னால் பறந்து சென்றது. இதையடுத்து விமானம் பறந்து சென்றதை ஒருவர் வீடியோ எடுத்து சமூக வலைத்தளங்களில் பதிவிட்டுள்ளார். இதையடுத்து இந்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகின்றது.
இந்த விமானம் எங்கிருந்து இயக்கப்பட்டது என்பது குறித்தான தகவல்களை சேகரிக்கும் பணியில் அமெரிக்க காவல் துறை ஈடுபட்டுள்ளது. பாகிஸ்தான் நாட்டின் முன்னாள் அதிபரும் முன்னாள் கிரிக்கெட் வீரருமான இம்ரான் கான் அவர்கள் தற்பெழுது சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். இவரை விடுதலை செய்ய வேண்டும் என்ற வாசகத்துடன் பறந்த விமானம் தற்பொழுது பரபரப்பை ஏற்படுத்தி இருக்கின்றது.