தி கேரள ஸ்டோரி படத்தை திரையிட கோரிக்கை! எம்.எல்.ஏ வானதி சீனிவாசன் அறிக்கை.
கடந்த மே 5ம் தேதி வெளியாகி பல சர்ச்சைகளை ஏற்படுத்தியுள்ள தி கேரளா ஸ்டோரி திரைப்படத்தை திரையட வேண்டும் என்று பா.ஜ.க எம்.எல்.ஏ அவர்கள் கோரிக்கை வைத்துள்ளார்.
இயக்குநர் சுதிப்தோ சென் இயக்கத்தில் கடந்த மே 5ம் தேதி வெளியான திரைப்படமான தி கேரளா ஸ்டோரி திரைப்படம் இந்தியா முழுவதும் பல சர்ச்சைகளை ஏற்படுத்தி வருகின்றது. இந்த திரைப்படத்திற்கு ஆதரவை விட எதிர்ப்புகள் அதிகம் கிளம்பி வருகின்றது. இதையடுத்து பாஜக கட்சியை சேர்ந்த ஒரு சிலர் மட்டும் தி கேரளா ஸ்டோரி திரைப்படத்திற்கு ஆதரவு தெரிவித்து வருகின்றனர். அந்த வகையில் பா.ஜ.க எம்.எல்.ஏ வானதி சீனிவாசன் அவர்களும் ஆதரவு தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக கோவையில் எம்.எல்.ஏ வானதி சீனிவாசன் வெளியிட்டுள்ள அறிக்கையில், “தி கேரளா ஸ்டோரி திரைப்படம் எந்த மதத்திற்கும் எதிரானது அல்ல. எந்த ஒரு மதத்தின் நம்பிக்கைகளையும் கேலியோ கிண்டலோ செய்யப்படவில்லை. தி கேரளா ஸ்டோரி திரைப்படத்தில் ஒரு மதத்தின் பெயரை தவறாக பயன்படுத்தி பயங்கரவாத செயல்களை செய்வதற்கு ஆள் சேர்க்கிறார்கள் என்பது தான் கதை. எனவே தமிழகத்தில் தி கேரளா ஸ்டோரி திரைப்படத்தை திரையிட உரிய பாதுகாப்பு வழங்க வேண்டும்” என்று கூறியுள்ளார்.