அமெரிக்காவில் இருந்து  62 ஆண்டுகளுக்கு முன் கடத்தப்பட்ட நடராஜர் சிலை மீட்பு!  காவல்துறையினர் விளக்கம்!

Photo of author

By Parthipan K

அமெரிக்காவில் இருந்து  62 ஆண்டுகளுக்கு முன் கடத்தப்பட்ட நடராஜர் சிலை மீட்பு!  காவல்துறையினர் விளக்கம்!

துவாரபாலகர் ,நடராஜர் ,சிவன் ,பார்வதி ,குழந்தை பருவ சம்பந்தர் ,விஷ்ணு ஸ்ரீதேவி சிலைகள் கடத்தப்பட்டது. அவைகள் கடந்த ஜூலை மாதம் வெளிநாடுகளில் இருந்து டெல்லியிலிருந்து ரயிலில்  சென்னை வந்தடைந்தது. அதனை தொடர்ந்து  தற்போது  தஞ்சை திருவீதிக்குடி கண்டியூரில் உள்ள வேதபுரீஸ்வரர் கோவிலில்லிருந்து 62 ஆண்டுகளுக்கு முன் கடத்தப்பட்ட 2000 ஆண்டுகள் பழமை வாய்ந்த நடராஜர் சிலை நியூயார்க் ஆசியா சொசைட்டி அருங்காட்சியகத்தில் உள்ளது என தகவல் கிடைத்துள்ளது. மேலும் யுனெஸ்கோ ஒப்பந்தப்படி நடராஜர் சிலையை மீட்டு வர நடவடிக்கை எடுத்துவருவதாக சிலைக்கடத்தல் தடுப்பு பிரிவு காவல்துறையினர் விளக்கம் தெரிவித்துள்ளனர்.