சுங்கச்சாவடி தடுப்பை உடைத்து சென்ற டிராக்டர்கள்! இத்தனை டன் ஆற்று மணல் கடத்தலா?

சுங்கச்சாவடி தடுப்பை உடைத்து சென்ற டிராக்டர்கள்! இத்தனை டன் ஆற்று மணல் கடத்தலா?

ஆற்று மணல் எடுப்பது சட்டத்திற்கு எதிரானது. இது அனைத்தும் மாநிலங்களுக்கும் பொருந்தும். ஆனால் தற்பொழுதும் வரை அரசிற்கு தெரியாமல் ஆற்று மணலை எடுத்துக் கொண்டுதான் உள்ளனர். அந்த வகையில் உத்தரபிரதேசம் மாநிலத்தில் நேற்று 13 டிராக்டர்களில் ஆற்று மணல் கடத்தப்பட்டுள்ளது. உபி யில் ஆக்ரா வாரியார் என்ற நெடுஞ்சாலையில் ஜாஜா வாவ் என்ற சுங்க சாவடி உள்ளது.

இந்த சுங்க சாவடி வழியாக நேற்று இரவு 13 டிராக்டர்கள் சென்றுள்ளது. கட்டணம் செலுத்தாமல் இந்த 13 டிராக்டர்களும் சுங்கச்சாவடியின் தடுப்பை உடைத்து விட்டு சென்றுள்ளது. இந்த வீடியோவானது சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது. ஆற்று மணல் கடத்துவது சட்டத்திற்கு புறமானது என்றாலும் பலர் அரசியல்வாதிகளை பின்னே வைத்துக் கொண்டு இதனை செய்து தான் வருகின்றனர். அந்த வகையில் தற்பொழுது உபி – யில் அரங்கேறிய இந்த சம்பவம் மக்களிடையே பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது..