உலகம் முழுவதும் கொரோனாவின் பரவல் தீவிரமடைந்தும் நிலையில், பரவலை கட்டுப்படுத்துவதற்கான ஆய்வுகள் உலகம் முழுவதும் நடைபெற்றுள்ளது.
இந்த ஆய்வுகளில் முக்கியமாக யாரை கொரோனா எளிதில் தாக்கும், யாரை தாக்காது உள்ளிட்டவற்றைக் குறித்து ஆராயப்படுகிறது.
இந்நிலையில் கொரோனா தொற்று முதலில் கண்டறியப்பட்ட வுகான் மாநிலத்தின் மருத்துவமனை ஒன்றில் ஒரு முக்கிய ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. அதில் எந்த இரத்த வகை சேர்ந்தவர்களை கொரோனா எளிதாக பதிக்கிறது உள்ளிட்ட ஆர்யாச்சிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது. அதன் ஆராய்ச்சி முடிவுகள் தற்போது வெளியிடப்பட்டுள்ளது.
அதன்படி கொரோனா பாதித்த 2500 பேரின் இரத்த மாதிரியை பரிசோதனை செய்ததில் 65 சதவீதம் பேர் ‘A’ இரத்த வகையை சேர்ந்தவர்கள் என்று கண்டறியப்பட்டுள்ளது.
அதாவது ‘A’ பாசிட்டிவ், ‘A’ நெகட்டிவ், ‘AB’ பாசிட் டிவ், ‘AB’ நெகட்டிவ் ஆகிய இரத்த மாதிரிகளை கொண்டவர்களை இந்த நோய்த் தொற்று எளிதாக தாக்கி உள்ளது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இன்னொரு பக்கம் ‘O’ பாசிட்டிவ், ‘OB’ பாசிட்டிவ், ‘OB’ நெகட்டிவ் மற்றும் ‘O’ நெகட்டிவ் வகை இரத்த வகை கொண்டவர்களை குறைந்த அளவிலேயே கொரோனா பாதிப்புக்குள்ளாகியுள்ளனர்.
‘O’ வகை ரத்தம் கொண்டவர்களை இந்த நோய்த் தொற்று தாக்காது என் இந்த ஆய்வில் சொல்லவில்லை. மற்ற இரத்த வகையை ஒப்பிட்டுப் பார்த்தால் இவர்களுக்கு தாக்குதல் குறைவாக ஏற்படுகிறது என்பதே இதன் பொருள்.
ஆனால் ‘A’ வகை ரத்தம் கொண்டவர்கள் மிக எளிதாக கொரோனா நோய்த் தொற்று தாக்குதலுக்கு உள்ளாகிறார்கள். எனவே இவர்கள் மிக அதிக கவனமாக இருக்க வேண்டும் என்று மருத்துவர்கள் எச்சரித்துள்ளனர்.
கடந்த சில ஆண்டுகளுக்கு முன் சார்ஸ் நோய் வந்த போதும் அந்த நோய்த் தொற்று அதிகமாக ‘A’ வகை ரத்தம் கொண்டவர்களைத்தான் தாக்கியது. அதுவும் கொரோனா குடும்பத்தை சார்ந்த ஒரு வகை நோய்த் தொற்று என்பது குறிப்பிடத்தக்கது.