கொரோனாவுக்கு எதிராக செயற்கை எதிர்ப்பு சக்தி?

0
192
Researchers researching about artificial immunity to fight with covid

 

கொரோனா வைரசின் தாக்கம் உலகம் முழுவதும் அதிகரித்து வரும் சூழ்நிலையில், பிரிட்டனைச் சேர்ந்த விஞ்ஞானிகள் செயற்கையான எதிர்ப்பு சக்தியை கண்டறிந்துள்ளனர்.

உலகையே ஆட்டிப் படைத்திருக்கும் கொரோனா வைரசிற்கு எதிராக இன்றளவும் பல நாடுகள் தடுப்பூசி கண்டுபிடிப்பதில் தீவிரம் காட்டி வருகின்றன.

தற்போதையளவில்,
பைசர் – பயான்டெக் மருந்து உலகளவில் பிரபலாக உள்ளது.

இச்சூழ்நிலையில் பிரிட்டனைச் சேர்ந்த மருத்துவ விஞ்ஞானிகளால் ஆர் ஆராய்ச்சி நடத்தப்பட்டு வந்த நிலையில், ‘ஏஇசட்டி-7442’ (AZD7442) என்கிற புதிய வகை எதிர்ப்பு சக்தி மருந்து ஒன்றை கண்டறிந்துள்ளது.

இந்த மருந்தானது, “அஸ்ட்ராசெனேகா” தடுப்பு மருந்து கண்டுபிடித்த குழுவினரால் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. கொரோனா வைரஸ் தாக்கியவர்களுக்கு இந்த மருந்தை செலுத்துவதன் மூலமாக, நோய் எதிர்ப்பு சக்தி அதிகளவில் கிடைக்கும் என நம்பப்படுகிறது.

வைரஸ் ஆய்வு நிபுணர், டாக்டர் கேத்தரின் அவர்கள், இதற்காக கொரோனா வைரஸ் தாக்கிய நோயாளிகள் 10 பேரைக் கொண்டு ஆய்வு மேற்கொண்டுள்ளார்.

தடுப்பூசி செலுத்தும் பணி தாமதமாகும் பட்சத்தில் இந்த எதிர்ப்பு சக்தியை ஊசிமூலம் கொரோனா வைரஸ் தாக்கிய நோயாளிகளுக்கு செலுத்துவதன் மூலமாக, வைரஸ் தாக்கத்திலிருந்து தப்பிக்கலாம் என அவர் தெரிவித்துள்ளார்.

வயது மூப்பு காரணமாக, கொரோனா வைரஸ் தாக்கத்தால் அவதிப்படுவோருக்கு இந்த எதிர்ப்பு சக்தி ஊசி மிகவும் பயனுள்ளதாக அமையும் என்றும் கூறினார். மேலும், சிலருக்கு தடூப்பூசி செலுத்துவதால் ஒவ்வாமை ஏற்படலாம் என்ற காரணத்தால், அவர்களுக்கு எதிர்ப்பு சக்தியை கூட்டுவதற்காக இந்த எதிர்ப்பு சக்தி மருந்தை பயன்படுத்தலாம் என்றும் அவர் கூறினார்

மேலும், புரதத்தால் ஆன “மாலிக்யூல்கள்” கொண்ட எதிர்ப்பு சக்தி பொருளானது, நமது உடலுக்குள்ளேயே உற்பத்தி செய்யப்படுகிறது. இந்த எதிர்ப்புசக்தியானது ஆராய்ச்சிக்கூடத்தில் செயற்கை முறையில் தயாரிக்கப்படுகிறது. இதன் பெயர் “மோனோகிளோனல் ஆன்ட்டி பாடீஸ்”.

தடுப்பூசி மருந்துகள் உடலின் எதிர்ப்புசக்தியை அதிகரிக்க பயன்படுகின்றன. ஆனால், செயற்கை எதிர்ப்பு சக்தியானது, கொரோனா வைரஸ் நோயாளியின் உடலில் செலுத்தப்படுவதால் இயற்கை எதிர்ப்பு சக்தியுடன் சேர்ந்து நமது உடலிலுக்குள் நுழையும் கொரோனா வைரஸ்களுடன் மோதத் தயாராகின்றன.

இந்த இரண்டுஎதிர்ப்பு சக்திகளும் ஒன்று சேர்வதால் நுரையீரலில் பெருகும் வைரஸை எளிதில் அழித்து விடுகின்றன.

குறிப்பாக, நோய் எதிர்ப்பு சக்தி குறைவாக உள்ள வயதானவர்களுக்கு, இந்த செயற்கை எதிர்ப்பு சக்தி மருந்துகளை ஊசியின் மூலமாக செலுத்துவதால், நல்ல பலன் கிடைக்கும் என்று விஞ்ஞானிகள் நம்புகின்றனர்.

Previous articleபாரதிகண்ணம்மா சீரியலில் கண்ணம்மாவாக ஜீ தமிழ் சீரியல் நடிகை.!!
Next articleOPS – சசிகலா; பிளவுபட்ட அதிமுக ?