சுதந்திரம் பெற்று 75 ஆண்டை முன்னிட்டு திருவிழா வெகு விமர்சையாக கொண்டாடப்படுகிறது. இந்த விழாவின் ஒரு பகுதியாக ராஜ்காட்டில் உள்ள மகாத்மா காந்தி நினைவிடத்தில் அஞ்சலி செலுத்தினார். மேலும் டெல்லி செங்கோட்டையில் தேசியக்கொடியை ஏற்றி விட்டு, அதை அடுத்த நாட்டு மக்களிடம் உரையாடினார். அப்பொழுது தனது சுதந்திர தின வாழ்த்துக்களையும் பகிர்ந்து கொண்ட அவர் பல்வேறு முக்கியமான அறிவிப்புகளை வெளியிட்டு உள்ளார்.
நாட்டின் 75 ஆவது சுதந்திர தினத்தை முன்னிட்டு மக்களிடையே உரையாற்றி வரும் பிரதமர் மோடி அவர்கள் பல்வேறு புதிய அறிவிப்புகளை வெளியிட்டு வருகிறார். அதில் சுமார் 100 லட்சம் கோடி செலவில் இந்த இளைஞர்களுக்கு புதிய வேலைவாய்ப்புகளை உருவாக்கும் திட்டம் அமைய உள்ளதாக தெரிவித்துள்ளார்.
நாடு முழுவதும் பிரதான் மந்திரி கதிசக்தி திட்டம் என்ற பெயரில் புதிய திட்டம் உருவாக்கப்படும். மேலும் நாட்டின் உள்கட்டமைப்பு வளர்ச்சிக்காக 100 லட்சம் கோடி நிதி ஒதுக்கீடு செய்து, இந்த திட்டத்தின் கீழ் இளைஞர்களுக்கு புதிய வேலைவாய்ப்புகளை உருவாக்கவும், உள்நாட்டு உற்பத்தியாளர்களை சர்வதேச அளவில் உயர்த்தவும், எதிர்காலத் தேவைக்கு பொருளாதார மண்டலங்களை உருவாக்கவும் திட்டமிட்டுள்ளதாக அவர் கூறியுள்ளார்.
இந்தியாவின் முதுகெலும்பாக விளங்கக்கூடிய விவசாயப் பணியை செய்பவர்கள் 2 ஹெக்டருக்கும் குறைவாக நிலம் வைத்திருந்தால் அவர்கள் மீது அரசு கவனம் செலுத்தி வருகிறது. மேலும் அனைத்து கிராமங்களையும் டிஜிட்டல் மயமாக்கும் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. எனவே இந்தியாவில் இந்த சுதந்திர தினத்தை முன்னிட்டு நாடு முழுவதும் 75 வந்தே பாரத் ரயில் சேவை விரிவுபடுத்தப்படும் என்றும் தெரிவித்துள்ளார்.
அத்துடன் மேலும் மியான்மர் வங்கதேசம் தென்கிழக்கு ஆசிய பகுதிகளுக்கும் ரயில் போக்குவரத்து தொடங்கப்படும். அதேபோல் தாழ்த்தப்பட்டோர் பழங்குடியினர் பிற்படுத்தப்பட்டோர் பொதுப் பிரிவினருக்கான இட ஒதுக்கீடு அளிக்கப்படும். இந்தியாவில் கிராமங்கள் மற்றும் நகரங்களுக்கு இடையே ஒரு பாலம் அமைக்கப்படும். ஜல் ஜீவன் திட்டத்தின் கீழ் இரண்டு ஆண்டுகளில் மட்டும் சுமார் 4.5 கோடிக்கும் அதிகமான வீடுகளுக்கு குழாய் மூலம் குடிநீர் இணைப்பு வழங்கப்பட்டுள்ளது என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.